ஐபோன் எக்ஸ் வெடித்ததாக புகார் - ஆப்பிள் விசாரணை!

விளம்பரம்
Written by Ankit Chawla மேம்படுத்தப்பட்டது: 15 நவம்பர் 2018 17:08 IST
ஹைலைட்ஸ்
  • இச்சம்பவம் வாஷிங்டனில் நிழந்துள்ளது.
  • ஐபோன் எக்ஸ் பத்து மாதங்களுக்கு முன்னால் வாங்கப்பட்டது.
  • விசாரணைக்காக சிதைத்த பாகங்களை திரும்ப கேட்பதாக பயனாளர் கூறியுள்ளார்.

Photo Credit: Twitter/ Rahel Mohamad

சாஃப்ட்வேர் அப்டேட் செய்து கொண்டிருந்த போது போன் வெடித்ததாக பயனாளர் கூறியுள்ளார். இச்சம்பவம் வாஷிங்டனில் நிகழ்ந்துள்ளது. ஐபோன் எக்ஸ் iOS12.1-க்கு அப்டேட் ஆகிக் கொண்டிருந்த போது சூடாகி வெடித்ததாக கூறியுள்ளார். ஐபோன் எக்ஸினை அவர் வாங்கி பத்து மாதங்களே ஆகியுள்ளது. கேட்ஜெட் 360, கேள்விக்குள்ளாகியிருக்கும் ஐபோன் எக்ஸின் உரிமையாளர் ராகேல் முகமதை தொடர்பு கொண்டபோது, அவர் அளித்த தகவல்கள்.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஐபோன் வாங்கிய பயன்படுத்தி வந்தேன்.
ஐபோன் எக்ஸ் iOS12.1-க்கு அப்டேட் ஆகிக் கொண்டிருந்த போது அதனை சார்ஜரில் கனெக்ட் செய்தேன். இறுதியில், கருப்பு நிற புகை போனிலிருந்து வெளிவர ஆரம்பித்தது. அப்டேட் ஆகி முடிந்ததும் போன் தீப்பிடித்து புகை வர ஆரம்பித்ததாக கூறினார். மேலும் போன் வெடிப்பதற்கு முன் சார்ஜரை அணைத்து விட்டதாக தெரிவித்துள்ளார். போனை கையில் எடுத்த போது மிகவும் சூடாக இருந்தது. அதனால் போனை கீழே போட்டதும் புகை வர ஆரம்பித்தது. என்று கூறினார்.

ஐபோன் எக்ஸினை சார்ஜ் செய்ய அதற்குரிய சார்ஜரை பயன்படுத்தியதாக முகமது கூறியுள்ளார்.

மேலும் இதனால் யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக முகமது உடனடியாக ஆப்பிள் நிறுவனத்தை நாடியுள்ளார். ஆப்பிள் நிறுவனம் இதற்கு அளித்த பதிலில், இதற்கான தீர்வினை விரைவில் காண்போம் என்று கூறிப்பிட்டுள்ளது. கேஜெட் 360 இதுகுறித்த தகவல் கிடைத்ததும் உங்களுக்கு தெரியப்படுத்தும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Apple, iPhone, iPhone X, Samsung Galaxy Note7
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சாம்சங்கின் 50MP கேமரா கொண்ட மடிக்கக்கூடிய ஃபோனுக்கு ₹19,000 தள்ளுபடி; சமீபத்திய சலுகையைப் பாருங்கள்
  2. AI உதவியுடன் இன்டர்வியூவில் வென்று ₹1.5 கோடி வேலை பெற்ற நபர்; தனது உத்தியைப் பகிர்ந்துள்ளார்!
  3. ஜியோ ஹோம் 2 மாத திட்டத்தில் 1 மாதம் இலவசம்: 100Mbps இன்டர்நெட், 12 OTT ஆப்ஸ்கள் இலவசம்!
  4. அறிமுகத்திற்கு முன் கசிந்தது விவோ S2 விலை, முழு விவரங்கள் மற்றும் வடிவமைப்பு!
  5. கூகிள் இந்தியாவில் 'ஆஸ்க் கூகிள் பே' என்ற ஜெமினி AI சாட்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது
  6. Paytm தனது செயலியில் பகிரப்பட்ட குழுச் செலவுகளுக்காக பில்களைப் பிரிக்கும் வசதியை அறிமுகப்படுத்துகிறது
  7. ஜெமினியால் இப்போது கூகிள் டாக்ஸில் உள்ள கருத்துகளைப் படிக்கவும்,சுருக்கவும்,பதில்களை வரைவு செய்யவும் முடியும்
  8. சாம்சங் கேலக்ஸி S26 FE போனின் சார்ஜிங் வேகத்தில் மாற்றம் இருக்காது என சான்றிதழ் தளம் மூலம் தெரியவந்துள்ளது!
  9. வாட்ஸ்அப் வெப்பில் குரூப் வீடியோ கால் வசதி அறிமுகம்; குவிக்HD, சத்தம் குறைப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன!
  10. விவோ T5x 5G ஃபியூஷன் ரெட் வண்ண மாடல் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.