ஐபோன் எக்ஸ் iOS12.1-க்கு அப்டேட் ஆகிக் கொண்டிருந்த போது அதனை சார்ஜரில் கனெக்ட் செய்தேன்
Photo Credit: Twitter/ Rahel Mohamad
சாஃப்ட்வேர் அப்டேட் செய்து கொண்டிருந்த போது போன் வெடித்ததாக பயனாளர் கூறியுள்ளார். இச்சம்பவம் வாஷிங்டனில் நிகழ்ந்துள்ளது. ஐபோன் எக்ஸ் iOS12.1-க்கு அப்டேட் ஆகிக் கொண்டிருந்த போது சூடாகி வெடித்ததாக கூறியுள்ளார். ஐபோன் எக்ஸினை அவர் வாங்கி பத்து மாதங்களே ஆகியுள்ளது. கேட்ஜெட் 360, கேள்விக்குள்ளாகியிருக்கும் ஐபோன் எக்ஸின் உரிமையாளர் ராகேல் முகமதை தொடர்பு கொண்டபோது, அவர் அளித்த தகவல்கள்.
இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஐபோன் வாங்கிய பயன்படுத்தி வந்தேன்.
ஐபோன் எக்ஸ் iOS12.1-க்கு அப்டேட் ஆகிக் கொண்டிருந்த போது அதனை சார்ஜரில் கனெக்ட் செய்தேன். இறுதியில், கருப்பு நிற புகை போனிலிருந்து வெளிவர ஆரம்பித்தது. அப்டேட் ஆகி முடிந்ததும் போன் தீப்பிடித்து புகை வர ஆரம்பித்ததாக கூறினார். மேலும் போன் வெடிப்பதற்கு முன் சார்ஜரை அணைத்து விட்டதாக தெரிவித்துள்ளார். போனை கையில் எடுத்த போது மிகவும் சூடாக இருந்தது. அதனால் போனை கீழே போட்டதும் புகை வர ஆரம்பித்தது. என்று கூறினார்.
![]()
ஐபோன் எக்ஸினை சார்ஜ் செய்ய அதற்குரிய சார்ஜரை பயன்படுத்தியதாக முகமது கூறியுள்ளார்.
மேலும் இதனால் யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக முகமது உடனடியாக ஆப்பிள் நிறுவனத்தை நாடியுள்ளார். ஆப்பிள் நிறுவனம் இதற்கு அளித்த பதிலில், இதற்கான தீர்வினை விரைவில் காண்போம் என்று கூறிப்பிட்டுள்ளது. கேஜெட் 360 இதுகுறித்த தகவல் கிடைத்ததும் உங்களுக்கு தெரியப்படுத்தும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Realme GT 8 Pro, GT 8 Pro Dream Edition Go on Sale in India for the First Time Today: Price, Offers, Features