Apple நிறுவனம் அதன் பிரத்யேக ஆப்பிள் சிறப்பு நிகழ்வு 2019-ல் ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 புரோ மேக்ஸ் என மூன்று புதிய ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்தியது. 99.900 ரூபாய் விலையில் மற்ற இரண்டு மாடல்களுடன் ஒப்பிடும்போது ஐபோன் 11 நியாயமான விலையாக உள்ளது. புதிய ஐபோன்கள் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் 8 ஆகியவற்றின் எம்ஆர்பி விலையில் 20,000 ரூபாயை குறைத்துள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் XS மற்றும் ஐபோன் XR ஆகியவற்றின் விலையும் 10,000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது, மற்றும் ஐபோன் 7 தொடரின் விலைகளும் குறைக்கப்பட்டன.
மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஐபோன் 8 பிளஸ் விலை 20,000 ரூபாய் குறைக்கப்பட்டு, இப்போது 49.900 ரூபாய் என்ற ஆரம்ப விலையில் உள்ளது. தற்போது அதிக மலிவானது ஐபோன் 7 32GB வகையேம், இதன் விலை இப்போது 29,900 ரூபாய் மட்டுமே. இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு விலைக் குறைப்புக்குப் பிறகு, ஐபோன் XR-ன் விலை மற்றொரு முறை குறைக்கப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் இப்போது ஐபோன் 8 பிளஸ் போன்று 49,900 ரூபாயில் விற்பனைக்கு உள்ளது. ஐபோன் X கடந்த ஆண்டின் அதே விலையில் விற்பனையாகிறது.
புதிய ஐபோன் மாடல்களைப் பற்றி பேசுகையில், இந்தியாவில் ஐபோன் 11 அடிப்படை 64GB வகையின் விலை 64,900 ரூபாய். இந்த ஸ்மார்ட்போன் 128GB மற்றும் 256GB என மேலும் இரண்டு வகைகளில் அறிமுகமாகியுள்ளது, இவை முறையே 69,900 ரூபாய் மற்றும் 79,900 ரூபாய் என்ற விலைகளில் அறிமுகமாகியுள்ளது. ஐபோன் 11 ஸ்மார்ட்போன் ஊதா (Purple), வெள்ளை (White), பச்சை (Green), மஞ்சள் (Yellow), கருப்பு (Black), மற்றும் சிவப்பு (Red) என ஆறு வண்ணங்களில் வரும்.
ஐபோன் 11 ப்ரோ ஸ்மார்ட்போனின் 64GB சேமிப்பு கொண்ட அடிப்படை வகை இந்தியாவில் 99,900 ரூபாய் என்ற விலையிலும், ஐபோன் 11 புரோ மேக்ஸ் 1,09,900 ரூபாய் என்ற விலையிலும் அறிமுகமாகியுள்ளது.
விலை குறைக்கப்பட்ட ஐபோன் மாடல்களின் அனைத்து விலைகளின் பட்டியலையும், அவற்றின் பழைய விலையையும் சேர்த்து தொகுத்துள்ளோம். இவை எல்லா ஐபோன் மாடல்களின் அதிகபட்ச சில்லறை விலைகள் (எம்ஆர்பி), மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் அவற்றை வெவ்வேறு விலையில் விற்கலாம்.
மாடல் | பழைய விலை (இந்தியாவில்) | புதிய விலை (இந்தியாவில்) |
---|---|---|
iPhone 11 64GB | - | 64,900 ரூபாய் |
iPhone 11 128GB | - | 69,900 ரூபாய் |
iPhone 11 256GB | - | 79,900 ரூபாய் |
iPhone 11 Pro 64GB | - | 99,900 ரூபாய் |
iPhone 11 Pro 256GB | - | 1,13,900 ரூபாய் |
iPhone 11 Pro 512GB | - | 1,31,900 ரூபாய் |
iPhone 11 Pro Max 64GB | - | 1,09,900 ரூபாய் |
iPhone 11 Pro Max 256GB | - | 1,23,900 ரூபாய் |
iPhone 11 Pro Max 512GB | - | 1,41,900 ரூபாய் |
iPhone XS Max 64GB | 1,09,900 ரூபாய் | - |
iPhone XS Max 256GB | 1,24,900 ரூபாய் | - |
iPhone XS Max 512GB | 1,44,900 ரூபாய் | - |
iPhone XS 64GB | 99,900 ரூபாய் | 89,900 ரூபாய் |
iPhone XS 256GB | 1,14,900 ரூபாய் | 1,03,900 ரூபாய் |
iPhone XS 512GB | 1,34,900 ரூபாய் | - |
iPhone XR 64GB | 59,900 ரூபாய் | 49,900 ரூபாய் |
iPhone XR 128GB | 64,900 ரூபாய் | 54,900 ரூபாய் |
iPhone XR 256GB | 74,900 ரூபாய் | - |
iPhone X 64GB | 91,900 ரூபாய் | 91,900 ரூபாய் |
iPhone X 256GB | 1,06,900 ரூபாய் | 1,06,900 ரூபாய் |
iPhone 8 Plus 64GB | 69,900 ரூபாய் | 49,900 ரூபாய் |
iPhone 8 Plus 128GB | - | 54,900 ரூபாய் |
iPhone 8 64GB | 59,900 ரூபாய் | 39,900 ரூபாய் |
iPhone 8 128GB | - | 44,900 ரூபாய் |
iPhone 7 Plus 32GB | 49,900 ரூபாய் | 37,900 ரூபாய் |
iPhone 7 Plus 128GB | 59,900 ரூபாய் | 42,900 ரூபாய் |
iPhone 7 32GB | 39,900 ரூபாய் | 29,900 ரூபாய் |
iPhone 7 128GB | 49,900 ரூபாய் | 34,900 ரூபாய் |
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்