5 கேமராக்களுடன் வருகிறது Huawei P40 Pro! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 27 டிசம்பர் 2019 16:14 IST
ஹைலைட்ஸ்
  • P40 & P40 Pro, மார்ச் 2020-ல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகி
  • P40 Pro-வில் 6.5 - 6.7-inch திரையுடன் வரும் என்று வதந்தி பரவியுள்ளது
  • இந்த கசிவு P40 Pro-வை நீல நிறத்தில் காட்டியது

Huawei P40 Pro-வின் கசிந்த பேனல், notchless டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கிறது

சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர், ஹவாய் நிறுவனத்தின் வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் P40 மற்றும் P40 Pro ஆகியவை மார்ச் 2020-ல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது சமீபத்திய கசிவு P40 Pro பின்புறத்தில் ஐந்து கேமராக்களுடன் வரக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ளது. வியாழக்கிழமை அறிக்கையின் படி, போனின் பின்புறத்தில் உள்ள ஐந்து ஸ்னாப்பர்களில்,  20 மெகாபிக்சல் ultra-wide, 12 மெகாபிக்சல் periscope telephoto (10x optical zoom), macro கேமரா மற்றும் 3D ToF யூனிட் ஆகியவற்றுடன் 64 மெகாபிக்சல் Sony IMX686 பிரதான சென்சார் இணைக்கப்பட்டுள்ளது. 

P40 Pro, 6.5-inch-ல் இருந்து 6.7-inch அளவைக் கொண்ட ஒரு திரையுடன் வருவதாகவும், பின்புற பேனலில் செவ்வக கேமரா தொகுதிகள் இருக்கும் என்றும் வதந்தி பரவியுள்ளது. இந்த கசிவு P40 Pro-வை நீல நிறத்தில் காட்டியது.

GSM Arena-வின் அறிக்கையின்படி, ஸ்மார்ட்போனின் கசிந்த பேனல், notchless டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கிறது. இருப்பினும், செல்பி கேமரா pop-up ஒன்றா அல்லது டிஸ்பிளேவுக்கு கீழ் உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

முந்தைய அறிக்கையின்படி, Huawei P40 Pro, 10x optical zoom-ஐ ஆதரிக்கும் என்று ஆய்வாளர் மிங்-சி குவோ (Ming-Chi Kuo), கூறியுள்ளார். ஆய்வாளர் கூறுகையில், Huawei P40 சீரிஸ் CNY 4,000 முதல் CNY 5,000 வரை (சுமார் ரூ. 40,500 முதல் ரூ. 50,700 வரை) விலையில் தொடங்கும்.

P40 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கூகுளின் ஆண்ட்ராய்டுக்கு பதிலாக அதன் சொந்த HarmonyOS இயக்க முறைமையை இயக்கக்கூடும் என்று ஹவாய் நுகர்வோர் வணிகத்தின் தலைவர் ரிச்சர்ட் யூ (Richard Yu) சமீபத்தில் சுட்டிக்காட்டினார். HarmonyOS இப்போது ஸ்மார்ட்போன்களுக்கு தயாராக உள்ளது. ஆனால் அமெரிக்காவின் நிலைமை மாறுமா என்று நிறுவனம் காத்திருக்கிறது, என்று அவர் கூறினார்.

கூடுதலாக, ஹவாய் தனது Kirin பிராசசரை Internet of Things (IoT) மற்றும் ரோபாட்டிக்ஸ் போன்ற பிரிவுகளுக்கு தொழில்களில் உள்ள மற்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் யூ (Yu) வெளிப்படுத்தினார்.

நிறுவனம் சமீபத்தில் தனது சமீபத்திய Kirin 990 (5G) முதன்மை சிப்செட்டை ஒருங்கிணைந்த 5G மோடமுடன் IFA 2019-ல் அறிமுகப்படுத்தியது.

Kirin 990 (5G) என்பது non-standalone (NSA) மற்றும் standalone (SA) கட்டமைப்புகள் மற்றும் TDD/FDD முழு அதிர்வெண் பேண்டுகள் இரண்டையும் ஆதரிக்கும் முதல் முழு அதிர்வெண் 5G SoC ஆகும். இது பல்வேறு நெட்வொர்க்குகள் மற்றும் நெட்வொர்க்கிங் முறைகளின் கீழ் வன்பொருள் தேவைகளுக்கு ஏற்ப உதவுகிறது. 

Advertisement

Huawei P40 Pro to Offer 10x Optical Zoom With Periscope Camera: Ming-Chi Kuo

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Huawei
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. AI-ஆல நமக்கு வந்த வினை இது! 16GB RAM போன்கள் ஆடம்பரம் ஆகப் போகுது! 4GB போன்கள் மீண்டும் வரலாம்
  2. புது Reno போன்! Oppo Reno 15C வந்துருச்சு! 6,500mAh பேட்டரி, 3.5x ஆப்டிகல் ஜூம்! இந்தியால எப்போ வரும்?
  3. Foxconn அமெரிக்காவுக்குப் போகுது! $173 மில்லியன் முதலீடு! ஆனா, Apple-க்கு இதுல வேலையில்லை! காரணம் என்ன?
  4. புது OnePlus ஃபிளாக்ஷிப் கில்லர்! 15R லான்ச்சுக்கு முன்னாடியே விலை லீக்! 7,400mAh பேட்டரி, 165Hz டிஸ்பிளே
  5. Jio Happy New Year 2026: Gemini Pro AI உடன் 3 புதிய பிளான்கள்
  6. ₹43,000-க்கு புது Nothing போன்! Phone 4a Pro-ல eSIM சப்போர்ட், புது பிங்க் கலர்! ஆடியோவுல 'Headphone a' வருது
  7. WhatsApp-ல இனி Missed Call வந்தா Voice Message அனுப்பலாம்! புது ஆப்ஷன் வந்துருச்சு! நீங்க ட்ரை பண்ணீங்களா?
  8. WhatsApp-ல இனி Missed Call வந்தா Voice Message அனுப்பலாம்! புது ஆப்ஷன் வந்துருச்சு! நீங்க ட்ரை பண்ணீங்களா?
  9. 45W-க்கு இனி டாட்டா! Galaxy S26 Ultra-ல் 60W சார்ஜிங் வருது! Wireless-ல 25W! சாம்சங் ஃபேன்ஸ் இதைத்தான் கேட்டாங்க
  10. புது Foldable போன்! Huawei Mate X7: 88W சார்ஜிங், 5x ஆப்டிகல் ஜூம்! இந்தியால வருமா?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.