Huawei P40 Pro, 6.5-inch-ல் இருந்து 6.7-inch அளவைக் கொண்ட ஒரு திரையுடன் வருவதாக வதந்தி பரவியுள்ளது மற்றும் பின்புற பேனலில் செவ்வக கேமரா தொகுதிகள் இருக்கிறது.
Photo Credit: 9TechEleven
Richard Yu சமீபத்தில் Huawei P40 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் HarmonyOS இயக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டினார்
ஹவாய் நிறுவனத்தின் வரவிருக்கும் P40, P40 Pro ஸ்மார்ட்போன்கள் மார்ச் 2020-ல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது சமீபத்திய கசிவு P40 Pro மொத்தம் ஏழு கேமராக்களுடன் வரக்கூடும். பின்புறத்தில் ஐந்து மற்றும் முன்பக்கத்தில் இரண்டு கேமராக்கள் ஆகும். அதன் பின்புறத்தில் உள்ள ஐந்து ஸ்னாப்பர்களில் ஒரு பிரதான wide-angle lens, cine lens, ஒரு ToF (Time of Flight) சென்சார், 10x optical zoom ஆதரவுடன் periscope lens மற்றும் 9x optical zoom அல்லது ஒரு ultrawide lens உடன் telephoto lens ஆகியவை இடம்பெறும் என்று GizmoChina தெரிவித்துள்ளது.
Huawei P40 Pro, 6.5-inch-ல் இருந்து 6.7-inch அளவைக் கொண்ட ஒரு திரையுடன் வருவதாக வதந்தி பரவியுள்ளது மற்றும் பின்புற பேனலில் செவ்வக கேமரா தொகுதிகள் இருக்கிறது.
Huawei P40 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கூகுளின் ஆண்ட்ராய்டுக்கு பதிலாக நிறுவனத்தின் சொந்த HarmonyOS இயக்க முறைமையை இயக்கக்கூடும் என்று ஹவாய் நுகர்வோர் வணிகத்தின் தலைவர் ரிச்சர்ட் யூ (Richard Yu) சமீபத்தில் சுட்டிக்காட்டினார்.
HarmonyOS இப்போது ஸ்மார்ட்போன்களுக்கு தயாராக உள்ளது. ஆனால், அமெரிக்காவின் நிலைமை மாறுமா என்று நிறுவனம் காத்திருக்கிறது என்றும் அவர் கூறினார்.
கூடுதலாக, ஹவாய் தனது கிரின் பிராசசர்களை (Internet of Things - IoT) மற்றும் ரோபாட்டிக்ஸ் போன்ற தொழில்களில் உள்ள பிற நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் யூ (Yu) வெளிப்படுத்தினார்.
நிறுவனம் சமீபத்தில் தனது சமீபத்திய Kirin 990 (5G) முதன்மை சிப்செட்டை ஒருங்கிணைந்த 5G மோடமுடன் IFA 2019-ல் அறிமுகப்படுத்தியது.
Kirin 990 (5G) என்பது non-standalone (NSA) மற்றும் standalone (SA) கட்டமைப்புகள் மற்றும் TDD/FDD முழு அதிர்வெண் பட்டைகள் இரண்டையும் ஆதரிக்கும் முதல் முழு அதிர்வெண் 5G SoC ஆகும். இது பல்வேறு நெட்வொர்க்குகள் மற்றும் நெட்வொர்க்கிங் முறைகளின் கீழ் வன்பொருள் தேவைகளுக்கு ஏற்ப உதவுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Xiaomi 18 Worldwide Debut Inches Closer Following First Major Regulatory Move
Google May Soon Give Android Users More Control Over Advanced Protection Features; Suggests APK Teardown