Huawei P40 has triple rear camera setup, Huawei P40 Pro has a quad rear camera setup, and the Huawei P40 Pro+ has a penta rear camera setup.
ஹூவாய் பி 40 ப்ரோ 5ஜி, குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது
ஆன்லைன் நிகழ்வில் Huawei பி 40 சீரிஸ் வியாழக்கிழமையன்று அறிமுகமானது. இந்தத் சீரிஸில் ஹூவாய் பி 40 5 ஜி, ஹவாய் பி 40 ப்ரோ 5 ஜி, மற்றும் ஹவாய் பி 40 புரோ + 5 ஜி ஆகிய மூன்று போன்கள் உள்ளன. மூன்று போன்களைப் பற்றிய பிற தகவல்கள் உள்ளே.
Huawei P40 5G 8 ஜிபி ரேம் / 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலில் வருகிறது, இதன் விலை யூரோ 799 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.66,300) ஆகும்ஜ். ஹவாய் பி 40 5ஜி, கருப்பு, ஆழ்கடல் நீலம் மற்றும் ஐஸ் ஒயிட் ஆகிய மூன்று பளபளப்பான கலர் வேரியண்ட்டுகள், அத்துடன் ப்ளஷ் கோல்ட் மற்றும் சில்வர் ஃப்ரோஸ்ட் ஆகிய இரண்டு மேட் வகைகளில் வருகிறது. இது ஏப்ரல் 7 முதல் விற்பனைக்கு வரும்.
Huawei P40 Pro 5G ஒற்றை 8 ஜிபி + 256 ஜிபி மாடலிலும் கிடைக்கிறது, இதன் விலை யூரோ 999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.82,900) ஆகும். இது ஹவாய் பி 40 5ஜி போன்ற வண்ணங்களில் கிடைக்கிறது, மேலும் ஏப்ரல் 7 முதல் விற்பனைக்கு வரும்.
Huawei P40 Pro+ 5G ஒற்றை 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மாடலில் வருகிறது, இதன் விலை யூரோ 1,399 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,16,000) ஆகும். புதிய ஹவாய் முதன்மை போன் பிளாக் பீங்கான் மற்றும் வெள்ளை பீங்கான் ஆகிய இரண்டு வண்ணங்களில் வருகிறது, இது ஜூன் முதல் விற்பனைக்கு வரும்.
டூயல்-சிம் (நானோ) ஹவாய் பி 40 5ஜி, EMUI 10.1 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது. இது 6.1 இன்ச் (1,080x2,340 பிக்சல்கள்) OLED பேனலைக் கொண்டுள்ளது, இது 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் உள்ளது. இந்த போன் ஆக்டா கோர் கிரின் 990 5 ஜி SoC, மாலி-ஜி 76 எம்சி 16 ஜி.பீ-யில் இயங்குகிறது.
ஹவாய் பி 40 5 ஜி பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. முதன்மையானது எஃப் / 1.9 aperture கொண்ட 50 மெகாபிக்சல் கேமரா, எஃப் / 2.2 aperture கொண்ட 16 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர் மற்றும் எஃப் / 2.4 லென்ஸ் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், எஃப் / 2.0 aperture உடன் 32 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் உள்ளது. கேமராக்கள் மாத்திரை வடிவ ஹோல்-பஞ்ச் வடிவமைப்பில் வைக்கப்பட்டுள்ளன.
ஹவாய் பி 40 5 ஜி மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது
ஹவாய் பி 40 5ஜி, 128 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது, இது ஹவாய் நிறுவனத்தின் நானோ மெமரி 2 அட்டை வழியாக விரிவாக்கக்கூடியது. இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 6, 5G, Bluetooth v5.1, GPS, USB Type-C, NFC ஆகியவை அடங்கும். ஹவாய் பி 40 5ஜி 3,800 எம்ஏஎச் பேட்டரி மற்றும் சூப்பர்சார்ஜ் 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இந்த போன் 148.9x71.06x8.5 மிமீ அளவு மற்றும் 175 கிராம் எடை கொண்டது.
டூயல்-சிம் (நானோ) ஹவாய் பி 40 ப்ரோ 5ஜி, EMUI 10.1 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது. இது 90Hz டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதத்துடன் 6.58 இன்ச் (1,200x2,640 பிக்சல்கள்) OLED பேனலைக் கொண்டுள்ளது. இந்த போனும் அதே ஆக்டா கோர் கிரின் 990 5ஜி SoC, மாலி-ஜி 76 எம்சி 16 ஜி.பீ.யூ மூலம் இயக்கப்படுகிறது, மேலும் இது 8 ஜிபி ரேம் உடன் வருகிறது.
ஹவாய் பி 40 ப்ரோ 5ஜி பின்புறத்தில் நான்கு கேமராக்களைக் கொண்டுள்ளது, இதில் முதன்மையானது எஃப் / 1.9 aperture கொண்ட 50 மெகாபிக்சல் கேமரா மற்றும் ஓஐஎஸ், எஃப் / 1.8 aperture 40 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர், ஒரு சூப்பர்சென்சிங்குடன் 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 3டி depth sensing கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், நீங்கள் 32 மெகாபிக்சல் எஃப் / 2.2 லென்ஸ் மற்றும் depth சென்சாரைப் பெறுவீர்கள்.
ஹவாய் பி 40 ப்ரோ 5ஜி, 256 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது, நானோ மெமரி 2 கார்டு வழியாக விரிவாக்கக்கூடியது. இது அதே இணைப்பு விருப்பங்களைப் பகிர்ந்து கொள்கிறது. ஹவாய் பி 40 ப்ரோ, பெரிய 4,200 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது, இது சூப்பர்சார்ஜ் 40W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சூப்பர்சார்ஜ் 27W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த போன் 158.2x72.6x8.95 மிமீ அளவு மற்றும் 209 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது, இது ஹவாய் பி 40 5 ஜியை விட சற்று கனமானது.
ஹவாய் பி40 புரோ + 5ஜி அதிக இன்பில்ட் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது - 512 ஜிபி - இது விரிவாக்க முடியாதது. இது பென்டா கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது - எஃப் / 1.9 aperture கொண்ட 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் ஓஐஎஸ், எஃப் / 1.8 aperture கொண்ட 40 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர், 8 மெகாபிக்சல் சூப்பர்ஜூம் பெரிஸ்கோப் லென்ஸ் (125 மிமீ) கேமரா 10 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் ஒரு எஃப் / 4.4 aperture, 3 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட மற்றொரு 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் (80 மிமீ) கேமரா மற்றும் 3டி depth sensing கேமரா ஆகியவை அடங்கும்.
ஹவாய் பி 40 புரோ + 5 ஜி பென்டா பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது
இந்த போன்158.2x72.6x9 மிமீ அளவு மற்றும் 226 கிராம் எடையைக் கொண்டுள்ளது. இதன் 4,200 எம்ஏஎச் பேட்டரி சூப்பர்சார்ஜ் 40 டபிள்யூ ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சூப்பர்சார்ஜ் 40 டபிள்யூ சார்ஜிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது - இது உலகின் மிக வேகமாக வணிகமயமாக்கப்பட்ட 40W வயர்லெஸ் சார்ஜிங் என்று கூறப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்