Huawei P40 Pro, 6.5-inch-ல் இருந்து 6.7-inch அளவைக் கொண்ட ஒரு திரையுடன் வருவதாக வதந்தி பரவியுள்ளது.
Huawei P40 Pro-வின் கசிந்த பேனல், notchless டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கிறது
சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர், ஹவாய் நிறுவனத்தின் வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் P40 மற்றும் P40 Pro ஆகியவை மார்ச் 2020-ல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது சமீபத்திய கசிவு P40 Pro பின்புறத்தில் ஐந்து கேமராக்களுடன் வரக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ளது. வியாழக்கிழமை அறிக்கையின் படி, போனின் பின்புறத்தில் உள்ள ஐந்து ஸ்னாப்பர்களில், 20 மெகாபிக்சல் ultra-wide, 12 மெகாபிக்சல் periscope telephoto (10x optical zoom), macro கேமரா மற்றும் 3D ToF யூனிட் ஆகியவற்றுடன் 64 மெகாபிக்சல் Sony IMX686 பிரதான சென்சார் இணைக்கப்பட்டுள்ளது.
P40 Pro, 6.5-inch-ல் இருந்து 6.7-inch அளவைக் கொண்ட ஒரு திரையுடன் வருவதாகவும், பின்புற பேனலில் செவ்வக கேமரா தொகுதிகள் இருக்கும் என்றும் வதந்தி பரவியுள்ளது. இந்த கசிவு P40 Pro-வை நீல நிறத்தில் காட்டியது.
GSM Arena-வின் அறிக்கையின்படி, ஸ்மார்ட்போனின் கசிந்த பேனல், notchless டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கிறது. இருப்பினும், செல்பி கேமரா pop-up ஒன்றா அல்லது டிஸ்பிளேவுக்கு கீழ் உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
முந்தைய அறிக்கையின்படி, Huawei P40 Pro, 10x optical zoom-ஐ ஆதரிக்கும் என்று ஆய்வாளர் மிங்-சி குவோ (Ming-Chi Kuo), கூறியுள்ளார். ஆய்வாளர் கூறுகையில், Huawei P40 சீரிஸ் CNY 4,000 முதல் CNY 5,000 வரை (சுமார் ரூ. 40,500 முதல் ரூ. 50,700 வரை) விலையில் தொடங்கும்.
P40 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கூகுளின் ஆண்ட்ராய்டுக்கு பதிலாக அதன் சொந்த HarmonyOS இயக்க முறைமையை இயக்கக்கூடும் என்று ஹவாய் நுகர்வோர் வணிகத்தின் தலைவர் ரிச்சர்ட் யூ (Richard Yu) சமீபத்தில் சுட்டிக்காட்டினார். HarmonyOS இப்போது ஸ்மார்ட்போன்களுக்கு தயாராக உள்ளது. ஆனால் அமெரிக்காவின் நிலைமை மாறுமா என்று நிறுவனம் காத்திருக்கிறது, என்று அவர் கூறினார்.
கூடுதலாக, ஹவாய் தனது Kirin பிராசசரை Internet of Things (IoT) மற்றும் ரோபாட்டிக்ஸ் போன்ற பிரிவுகளுக்கு தொழில்களில் உள்ள மற்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் யூ (Yu) வெளிப்படுத்தினார்.
நிறுவனம் சமீபத்தில் தனது சமீபத்திய Kirin 990 (5G) முதன்மை சிப்செட்டை ஒருங்கிணைந்த 5G மோடமுடன் IFA 2019-ல் அறிமுகப்படுத்தியது.
Kirin 990 (5G) என்பது non-standalone (NSA) மற்றும் standalone (SA) கட்டமைப்புகள் மற்றும் TDD/FDD முழு அதிர்வெண் பேண்டுகள் இரண்டையும் ஆதரிக்கும் முதல் முழு அதிர்வெண் 5G SoC ஆகும். இது பல்வேறு நெட்வொர்க்குகள் மற்றும் நெட்வொர்க்கிங் முறைகளின் கீழ் வன்பொருள் தேவைகளுக்கு ஏற்ப உதவுகிறது.
Huawei P40 Pro to Offer 10x Optical Zoom With Periscope Camera: Ming-Chi Kuo
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Nandamuri Balakrishna's Akhanda 2 Arrives on OTT in 2026: When, Where to Watch the Film Online?
Single Papa Now Streaming on OTT: All the Details About Kunal Khemu’s New Comedy Drama Series
Scientists Study Ancient Interstellar Comet 3I/ATLAS, Seeking Clues to Early Star System Formation