5G ஆதரவுடன் வருகிறது Huawei Nova 6!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 25 அக்டோபர் 2019 10:35 IST
ஹைலைட்ஸ்
  • 5G ஆதரவுடன் Huawei Nova 6, CMIIT சான்றிதழ் பெற்றுள்ளது
  • 5G ஆதரவை வழங்குவதை உறுதி செய்ய Honor V30 உடன் சேரும்
  • Huawei Nova 6-ன் விவரக்குறிப்புகள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை

இந்த ஆண்டு தொடன்க்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Nova 5 வெற்றிபெற்றதையடுத்து Huawei Nova 6 அறிமுகமாக உள்ளது

Huawei இந்த ஆண்டு 5G ஆதரவுடன் பல முதன்மை தொலைபேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் இப்போது 5G இணைப்பை அதன் இடைப்பட்ட வரிசையில் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. மேலும் அந்த தொலைபேசிகளில் முதலாவது Huawei Nova 6-ஆக இருக்கும். இந்த தொலைபேசி சீனாவில் CMIIT சான்றிதழைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. Huawei Nova 6-ன் இரண்டு பதிப்புகளை அறிமுகப்படுத்த, Huawei திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது - ஒன்று 4G ஆதரவுடனும், மற்றொன்று 5G ஆதரவுடனும் Huawei Nova 6 அறிமுகப்படுத்தக்கூடும்.

Weibo-வில் உள்ள Tipster Digital Chat Station-ல் முதலில் Huawei Nova 6, 5ஜியின் CMIIT (சீனாவின் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்) சான்றிதழைக் கண்டறிந்தது. CMIIT தரவுத்தளத்தின்படி, Huawei Nova 6 மாடல் எண் WLZ-AN00-ஐக் கொண்டு செல்லும். மேலும், இது 5ஜி மற்றும் 4ஜி LTE நெட்வொர்க்குகள் இரண்டையும் ஆதரிக்கும் என்று குறிப்பிடுகிறது. இருப்பினும், இந்த பட்டியல் தொலைபேசியின் உள் வன்பொருள் பற்றி எதையும் வெளிப்படுத்தவில்லை.

Huawei Nova 6, 5G வேரியண்டிலும் வரும் என்று Tipster Evan Blass சமீபத்தில் ட்வீட் செய்துள்ளார். இந்த தொலைபேசி 4ஜி மற்றும் 5ஜி பதிப்புகளில் வரும் என்பதைக் குறிக்கிறது. Huawei Nova 6-ன் உள் விவரக்குறிப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை.

Honor V30 உடன் Huawei Nova 6 இணைகிறது. இது 5G ஆதரிப்பதோடு நவம்பரில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும். quad rear கேமரா அமைப்புடன் 48-megapixel முதன்மை கேமரா, 16-megapixel wide-angle snapper, மற்றும் depth sensing மற்றும் macro photography-க்கு இரண்டு 2-megapixel சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Huawei, Huawei Nova 6, Huawei Nova 6 5G, 5G
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Huawei Watch GT 6 Pro, GT 6: 21 நாள் பேட்டரி, IP69 ரேட்டிங் – இந்தியா விலை & அம்சங்கள்!
  2. OnePlus 15R, Pad Go 2 இந்திய அறிமுகம்: தேதி, அம்சங்கள் விவரம்!
  3. Oppo A6x: 6500mAh பேட்டரி, Dimensity 6300 – முழு விவரம்!
  4. 200MP கேமரா, 8000mAh பேட்டரி! HONOR 500 Pro-வில் Snapdragon 8 Elite – வெறித்தனமான அம்சங்களுடன் அறிமுகம்
  5. OnePlus ரசிகர்களே! உங்க 15R-ஆ இதுதான்! Snapdragon 8 Gen 5 சிப்செட்டோட புதிய Ace 6T போன்
  6. மொபைல்ல இல்ல, காருக்குள்ள ரே-டிரேசிங்! Dimensity P1 Ultra சிப்செட் – காருக்கான AI சக்தியை கொண்டுவந்த MediaTek
  7. 200MP, 7000mAh பேட்டரி... இனி சார்ஜ் பண்ற கவலையே இல்லை! Realme 16 Pro-வோட மிரட்டலான ஸ்பெக்ஸ் லீக்
  8. Phone 3 யூசர்களுக்கு தீபாவளி ட்ரீட்! Nothing OS 4.0 ஸ்டேபிள் அப்டேட் ரிலீஸ்—கிட்டத்தட்ட 8 புது வசதிகள்
  9. 8000mAh பேட்டரி கொண்ட OnePlus போனா? Ace 6T மாடலின் அசத்தல் வண்ணங்கள் ரிலீஸுக்கு முன்னாடியே வெளியீடு
  10. Oppo K15 Turbo Pro: Snapdragon 8 Gen 5, 8000mAh பேட்டரி லீக்.
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.