Huawei இந்த ஆண்டு 5G ஆதரவுடன் பல முதன்மை தொலைபேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் இப்போது 5G இணைப்பை அதன் இடைப்பட்ட வரிசையில் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. மேலும் அந்த தொலைபேசிகளில் முதலாவது Huawei Nova 6-ஆக இருக்கும். இந்த தொலைபேசி சீனாவில் CMIIT சான்றிதழைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. Huawei Nova 6-ன் இரண்டு பதிப்புகளை அறிமுகப்படுத்த, Huawei திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது - ஒன்று 4G ஆதரவுடனும், மற்றொன்று 5G ஆதரவுடனும் Huawei Nova 6 அறிமுகப்படுத்தக்கூடும்.
Weibo-வில் உள்ள Tipster Digital Chat Station-ல் முதலில் Huawei Nova 6, 5ஜியின் CMIIT (சீனாவின் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்) சான்றிதழைக் கண்டறிந்தது. CMIIT தரவுத்தளத்தின்படி, Huawei Nova 6 மாடல் எண் WLZ-AN00-ஐக் கொண்டு செல்லும். மேலும், இது 5ஜி மற்றும் 4ஜி LTE நெட்வொர்க்குகள் இரண்டையும் ஆதரிக்கும் என்று குறிப்பிடுகிறது. இருப்பினும், இந்த பட்டியல் தொலைபேசியின் உள் வன்பொருள் பற்றி எதையும் வெளிப்படுத்தவில்லை.
Huawei Nova 6, 5G வேரியண்டிலும் வரும் என்று Tipster Evan Blass சமீபத்தில் ட்வீட் செய்துள்ளார். இந்த தொலைபேசி 4ஜி மற்றும் 5ஜி பதிப்புகளில் வரும் என்பதைக் குறிக்கிறது. Huawei Nova 6-ன் உள் விவரக்குறிப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை.
Honor V30 உடன் Huawei Nova 6 இணைகிறது. இது 5G ஆதரிப்பதோடு நவம்பரில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும். quad rear கேமரா அமைப்புடன் 48-megapixel முதன்மை கேமரா, 16-megapixel wide-angle snapper, மற்றும் depth sensing மற்றும் macro photography-க்கு இரண்டு 2-megapixel சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்