பட்ஜட் ஸ்மார்ட் போன் ஹானர் 7S, இன்று மதியம் 12 மணி முதல் இந்தியாவில் பிரத்யேக விற்பனைக்கு வந்துள்ளது. ப்ளிப்கார்ட், HiHonor.com இணையதளங்களில், மூன்று நாட்களுக்கு விற்பனை நடைப்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
ஹானர் 7S ஸ்மார்ட் போன் மட்டுமின்றி, ஹானர் 9i, ஹானர் 9 லைட், ஹானர் 9N, ஹானர் 10 ஆகிய போன்களும் தள்ளுபடி விலைக்கு விற்பனையாகிறது
ஹானர் 7S குறிப்புகள்
2ஜிபி RAM, 16 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஹானர் 7S ஸ்மார்ட் போன் 6,999 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. ப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்கள், ஆக்ஸிஸ் பேங்க் பஸ் மூலம் பெற்றுக் கொண்டால்,200 ரூபாய் தள்ளுபடி உள்ளது. எச்டிஎஃப்சி இஎம்ஐ பரிவர்தணை செய்பவர்களுக்கு 350 ரூபாய் தள்ளுபடி உள்ளது.
நானோ டூயல் சிம் பெற்றுள்ள ஹானர் 7S ஸ்மார்ட் போன், ஆண்டுராய்டு 8.1 ஓரியோ தொழில்நுட்பத்தில் இயங்க கூடியது. 5.4 இன்ச் எச்.டி (720x1440 பிக்சல்) கொண்டுள்ளது. 13 மெகா பிக்சல் கேமரா, எல்.இ.டி ப்ளாஷ் ஆகியவை கொண்டுள்ளது. மேலும் 5 மெகா பிக்சல் ப்ரண்ட் கேமரா கொண்டுள்ளது. மேலும், ஃபேஸ் அன்லாக் வசதியும் உள்ளது
4G LTE, ப்ளூடூத் v4.2, GPS/ A-GPS ஆகியவை கொண்டுள்ளது. ஹானர் 7S ஸ்மார்ட் போன் 3,020mAh பேட்டரி கொண்டுள்ளது. மூன்று நாள் பிரத்யேக விற்பனையில், வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்