Honor 300 Ultra செல்போன் விரைவில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது
Photo Credit: Honor
ஹானர் 300 சீரிஸ் ஏற்கனவே சீனாவில் முன்பதிவு செய்ய கிடைக்கிறது
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Honor 300 Ultra செல்போன் பற்றி தான்.
Honor 300 Ultra செல்போன் விரைவில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஹானர் இப்போது Honor 300 மற்றும் Honor 300 Pro அறிமுகப்படுத்த போவதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு செல்போன்களுக்காண முன்கூட்டிய ஆர்டர்கள் இப்போது சீனாவில் ஆரம்பமாகிவிட்டது. ஆனால் அல்ட்ரா மாடல் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. Honor 300 Ultra பற்றிய படங்கள் சீன மைக்ரோ பிளாக்கிங் வலைத்தளமான Weibo தளத்தில் கசிந்துள்ளன. அதன் வடிவமைப்பு மற்றும் நிறங்கள் குறித்து பார்க்கலாம்.
Honor 300 Ultra டிசைன்
சீனாவில் ஹானர் 300 மற்றும் ஹானர் 300 ப்ரோவின் வருகையை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. Honor 300 Ultra முந்தைய மாடல்களை போலவே குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இதில் அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட பின்பக்க அமைப்பில் மூன்று கேமரா உள்ளது. வளைந்தடிஸ்பிளேவை கொண்டுள்ளது. பின்புற பேனல் கருப்பு மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் காட்டப்பட்டுள்ளது. வண்ணப்பூச்சு போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது.
ஹானர் 300 அல்ட்ரா மாடல் பற்றிய தகவல் அதிகம் தெரியவில்லை என்றாலும், ஹானர் 300 மற்றும் ஹானர் 300 ப்ரோவின் விவரங்கள் முன்பு ஆன்லைனில் கசிந்தன. Digital Chat Station சமீபத்தில் Honor 300 தொடரில் 1.5K OLED திரைகள் பொருத்தப்பட்டிருக்கும் என்று கூறியது. Honor 300 300 Pro ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 சிப்செட்உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஹானர் 300 ஸ்னாப்டிராகன் 7 ஜென் சிப்செட்டை கொண்டிருக்கும்.
ஹானர் 300 ப்ரோ 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் கேமராவைக் கொண்டிருக்கும். ஹானர் 100W வயர்டு சார்ஜிங்கிற்கான சப்போர்ட் உடன் ஹானர் 300 செல்போன் தொடரை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உடனும் வரக்கூடும்.
HONOR 300 Pro சாதனம் Rock Black, Tea Green மற்றும் Starlight Sand நிறங்களில் வெளிவரும் என தெரிகிறது. இது அல்ட்ராசோனிக் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் உடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த போனின் மற்ற அம்சங்களை நிறுவனம் விரைவில் வெளியிடும் என்று கூறியுள்ளது. ஹானர் நிறுவனம் வெளியிடப்போகும் புதிய டீஸர் தகவலில் வரவிருக்கும் போனின் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வேரியண்ட்விபரங்கள் குறிப்பிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் பற்றிய கூடுதல் விபரங்கள் விரைவில் அப்டேட் செய்யப்படும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Jurassic World: Rebirth OTT Release: Know When, Where to Watch the Scarlett Johansson-Starrer
Karam Is Now Streaming Online: Where to Watch Vineeth Sreenivasan's Malayali Action Thriller
Kamaro 2 Is Streaming Now on Sun NXT: Know All About the Horror Suspense Film
Saali Mohabbat OTT Release: Know When and Where to Watch the Radhika Apte-Starrer