ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் 2018 ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டாக உள்ளது. பிராண்ட்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதுவகையான போன்களை தந்து அவர்களை குழப்பத்தில் வைத்து வருகின்றன. எனினும் இறுதியில் எந்த போன்களை வாடிக்கையாளர்கள் வாங்குகிறார்கள் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிளிப்கார்ட் இணையதளத்திடம் இந்த ஆண்டு அதிகம் விற்பனையான போன்கள், அதிகம் விற்பனையான போன் பிராண்டுகள் உள்ளிட்ட பட்டியல் விவரங்கள் பெறப்பட்டன.
பிளிப்கார்ட்டை பொறுத்தவரையில், சியோமியே அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் ஆகும். இந்த வருடம் பல புதிய ஸ்மார்ட்போன் பிராண்டுகள் 10லட்சத்திற்கும் அதிகமான போன்கள் பிளிப்கார்ட் மூலம் விற்பனையாகி உள்ளன. அதில் ரியல்மி, ஹானர் மற்றும் அசூஸ் உள்ளிட்ட போன்களும் அடங்கும்.
ரியல்மி 2 ஸ்மார்ட்போனை பொறுத்தவரையில், 20 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன. அசூஸ் பிராண்டில் சென்போன் மேக்ஸ்ப்ரோ m1 10 லட்சத்திற்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளது. ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி 5A, ஹானர் 9 லைட் உள்ளிட்ட போன்களும் விற்பனையில் முன்னணி பெற்றன.
மத்திய ரக போன்களே இந்த ஆண்டு பிளிப்கார்ட்டில் அதிகம் விற்பனையாகியுள்ளது தெரிய வந்துள்ளது. இது, ரியல்மி 2, ரெட்மி நோட் 5 ப்ரோ. அசூஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M1 மற்றும் ஹானர் லைட் ஆகும்.
சந்தையில் மத்திய ரக போன்கள் அதிக அளவில் விற்பனை வந்ததும் ஒரு காரணம் என வால்மார்ட்க்கு சொந்தமான நிறுவனமான பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் ஆன்லைன் விற்பனை தளங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்தது. எனினும் சியோமி மற்றும் ரியல்மி ஸ்மார்ட்போன்களே பிளிப்கார்ட்டில்பண்டிகை காலங்களில் அதிகம் விற்பனையான ஸமார்ட்போன்களாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்