மே மாதம் 31-ஆம் தேதி வரை நடக்கவுள்ளது இந்த விற்பனை.
ஃப்ளிப்கார்ட்டின் மாத-கடைசி மொபைல் விற்பனை!
மீண்டும் ஸ்மார்ட்போன்களுக்கான சலுகை விற்பனையை துவங்கியுள்ளது. இந்த மே மாதம் 31-ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்த விற்பனைக்கு 'ஃப்ளிப்கார்ட் மன்த்-என்ட் மொபைல் ஃபெஸ்ட்' (Flipkart Month-End Mobile Fest) என பெயரிட்டுள்ளது இந்த நிறுவனம். இந்த மாதத்தில் மட்டும் இம்மாதிரி விற்பனையை ஃப்ளிப்கார்ட் நிறுவனம் நடத்துவது, இது மூன்றாவது முறை. முன்னதாக பிக் ஷாப்பிங் டேஸ் என்று ஒரு வாரம் நடத்தப்பட்ட இந்த விற்பனையில் அனைத்து விதமான பொருட்களுக்கும் சலுகைகளை வழங்கிய ஃப்ளிப்கார்ட், ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியது. அதேபோல இந்த விற்பனையிலும் ஸ்மார்ட்போன்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது.
முதலில், பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனையில் சலுகை வழங்கப்பட்ட இந்த 'ஐபோன் X', தற்போது விலை குறைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த விற்பனையில் 'ஐபோன் X'-ன் விலை 66,499 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் ஷாப்பிங் டேஸ்ஸில் தவரவிட்ட வாய்ப்பை, இந்த விற்பனையில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் இந்த விற்பனையில் 'நோக்கியா 5.1 ப்ளஸ்'-ன் விலையை 8,199 ரூபாயாக குறைத்துள்ளது. மேலும், மற்றொரு நோக்கியா ஸ்மார்ட்போனான 'நோக்கியா 6.1 ப்ளஸ்'-ன் விலை 12,999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 'நோக்கியா 6.1'-னின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையில் இதன் விற்பனை 6,999 ரூபாயாக இருக்கும்.
இந்த விற்பனையில் ஹானர் போன்களும் சலுகைகளை பெற்றுள்ளது. இந்த விற்பனையில் 'ஹானர் 9N' 8,499 ரூபாய் என்ற விலையிலும், 'ஹானர் 10 லைட்' 11,999 ரூபாய் என்ற விலையிலும் விற்பனையாகவுள்ளது.
மீண்டும் 'சான்சங் கேலக்சி நோட் 8'-ன் விலையை குறைத்துள்ள ஃப்ளிப்கார்ட் நிறுவனம், இந்த விற்பனையில் 36,990 ரூபாய் என்ற விலையில் இந்த ஸ்மார்ட்போனை விற்பனை செய்யவுள்ளது.
ஆக்சிஸ் வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ள ஃப்ளிப்கார்ட் நிறுவனம், ஆக்சிஸ் வங்கியின் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ஸ்மார்ட்போன்களை பெற்றால் 5 சதவிகித தள்ளுபடியை அறிவித்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Motorola Smartphones in India Now Support PhonePe's Indus Appstore
Circle to Search Update Adds Spam Detection; Google Brings Urgent Call Notes, New Emoji to Android