பிளிப்கார்ட்டில் மொபைல் போனான்ஸா விற்பனையின் போது Samsung Galaxy A50, Redmi K20, Redmi K20 Pro, Poco F1, Realme 5, Google Pixel 3a மற்றும் Honor 20 ஆகியவை தள்ளுபடியைப் பெற்றுள்ளன. நவம்பர் 18 வரை நீடிக்கும் இந்த விற்பனை, பிரபலமான ஸ்மார்ட்போன்களான Samsung Galaxy S9, Samsung Galaxy S9+ மற்றும் Apple iPhone 7 ஆகியவற்றிலும் தள்ளுபடியைக் கொண்டுவருகிறது. மேலும், HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு no-cost EMI ஆப்ஷன்களை பிளிப்கார்ட் வழங்குகிறது. பிளிப்கார்ட் விற்பனையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களில் கூடுதல் ப்ரீபெய்ட் தள்ளுபடிகள் உள்ளன. வாடிக்கையாளர்கள் தங்களின் தற்போதைய கைபேசிகளுக்கு பதிலாக கூடுதல் எக்ஸ்சேஞ் தள்ளுபடியைப் பெறலாம்.
பிளிப்கார்ட் மொபைல் போனான்ஸா விற்பனை கொண்டு வரும் குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்களில் ஒன்று Samsung Galaxy A50 ஆகும். அதன் ஆரம்ப விலையில் ரூ. 14.999-க்கு கிடைக்கிறது. ஸ்மார்ட்போன் வழக்கமாக 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுக்கு ரூ. 18,490-க்கு சில்லறை விலையில் கிடைக்கிறது.
Flipkart sale -ம் Realme 5 -ஐ ரூ. 9,999-யிலிருந்து ரூ. 8,999-க்கு விற்பனை செய்கிறது. இதேபோல், தற்போது நடைபெற்று வரும் விற்பனையின் கீழ் Oppo F11 Pro -வின் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ. 15,990-க்கு கிடைக்கிறது. இது ஆரம்ப விலையான ரூ. 16,990-யிலிருந்து ரூ. 1,000 தள்ளுபடி பெறுகிறது.
Flipkart, Realme 3 Pro -வை ரூ. 12.999-யிலிருந்து குறைக்கப்பட்டு, ஆரம்ப விலையாக ரூ. 9,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், Moto E6s ரூ. 7,999-யிலிருந்து குறைக்கப்பட்டு ரூ. 6,999-யாக உள்ளது. Oppo F11 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு 12,990 ரூபாயாக தள்ளுபடியுடன் விலைக் குறியீட்டைப் பெற்றுள்ளது. இந்த போனின் வழக்கமான விலை ரூ. 15.980 ஆகும். Honor 20-யின் விலையும் ரூ. 32,999 முதல் ரூ. 24.999-யாக குறைக்கப்பட்டுள்ளது.
Xiaomi போனை தேடும் வாடிக்கையாளர்கள் Redmi K20-யை ரூ. 21,999-யிலிருந்து தள்ளுபடி விலையாக ரூ. 19,999-க்கு வாங்கலாம். Redmi K20 Pro-வின் ஆரம்ப விலையாக ரூ. 25,999-க்கு விற்பனையில் உள்ளது. இந்த போனை ரூ. 27,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. மெலும், Poco F1 பொதுவாக சில்லறை விற்பனையில் ரூ. 18,999-யாகவும், தற்போது ஆரம்ப விலையாக ரூ. 14,999-க்கு கிடைக்கிறது.
பிளிப்கார்ட் விற்பனையின் போது Samsung Galaxy S9-ன் விலை ரூ. 27,999-யாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த போன் பொதுவாக ரூ. 29,999-க்கு விற்பனையாகிறது. அதேபோல், Samsung Galaxy S9+ -ன் விலை ரூ 49,990-யிலிருந்து ரூ. 34,999-யாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட் Google Pixel 3a-வை ரூ. 29,999-க்கு விற்பனை செய்கிறது. அதே சமயம் Google Pixel 3a XL ரூ. 34,999-க்கு கிடைக்கிறது. இந்தியாவில் Pixel 3a-வின் விலை ரூ.39,999-யாகவும் மற்றும் Pixel 3a XL-ன் விலை ரூ.44,999-யாகவும் அறிமுகப்படுத்தியது.
பிளிப்கார்ட் மொபைல் போனான்ஸா விற்பனையின் போது ஆப்பிள் ஐபோன் பிரியர்கள் iPhone 7 32 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை ரூ. 29.900-யிலிருந்து ரூ. 24,999-க்கு வாங்கலாம். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட iPhone 11, iPhone 11 Pro மற்றும் iPhone 11 Pro Max ஆகியவற்றில் no-cost EMI ஆப்ஷன்களும் உள்ளன.
ஸ்மார்ட்போன்கள் | வழக்கமான ஆரம்ப விலை (ரூ.) | தள்ளுபடி விலை (ரூ.) |
---|---|---|
Samsung Galaxy A50 | 18,490 | 14,999 |
Redmi K20 | 21,999 | 19,999 |
Redmi K20 Pro | 27,999 | 25,999 |
Poco F1 | 18,999 | 14,999 |
Realme 5 | 9,999 | 8,999 |
Oppo F11 Pro | 16,990 | 15,990 |
Realme 3 Pro | 12,999 | 9,999 |
Oppo F11 | 15,980 | 12,990 |
Honor 20 | 32,999 | 24,999 |
Samsung Galaxy S9 | 29,999 | 27,999 |
Samsung Galaxy S9+ | 49,990 | 34,999 |
iPhone 7 32GB | 29,900 | 24,999 |
Google Pixel 3a | 39,999 | 29,999 |
Google Pixel 3a XL | 44,999 | 34,999 |
Moto E6s | 7,999 | 6,999 |
Redmi 7A | 5,999 | 5,799 |
Realme 3 | 8,999 | 7,999 |
Realme 3i | 7,999 | 7,499 |
Realme 5 Pro | 13,999 | 12,999 |
Nokia 6.1 Plus | 11,999 | 8,999 |
Motorola One Action | 13,999 | 10,999 |
Samsung Galaxy A30S, Oppo Reno 10x Zoom மற்றும் Vivo V17 Pro போன்ற ஸ்மார்ட்போன்களில் 5,000 ரூபாய் எக்ஸ்சேஞ் தள்ளுபடியை பிளிப்கார்ட் விற்பனை வழங்குகிறது. அதேபோல், Vivo Z1 Pro, Realme X, Vivo Z1x மற்றும் Realme 3 போன்ற கைபேசிகளுக்காக செய்யப்பட்ட ப்ரீபெய்ட் பரிவர்த்தனைகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி உள்ளது..
மொபைல் போனான்சா (Mobile Bonanza) விற்பனைக்கு கூடுதலாக, Vivo தற்போது வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக பிளிப்கார்ட் மற்றும் நாட்டின் பிற ஆன்லைன் ஸ்டோர் மூலம் கிடைக்கும் முக்கிய ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடியை வழங்குகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்