இந்தியாவில் Samsung கேலக்ஸி ஏ 50 எஸ் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் தற்போதைய ஆரம்ப விலை ரூ.18,599 ஆகும். இந்த போன் கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் சாம்சங் Galaxy A50s-ன் 4 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.22,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜிஎஸ்டி உயர்வுக்கு முன் ரூ.21,070-யாக குறைந்தது.
சமீபத்திய தள்ளுபடியுடன், மிகவும் மலிவு விலையாக ரூ.18,599-க்கு கிடைக்கிறது.
போனின் 6 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.24,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜிஎஸ்டி உயர்வுக்கு முன் ரூ.26,900-யாக குறைந்தது.
இந்த மாடலின் தற்போதைய விலை ரூ.20,561-யாக உள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ 50 எஸ்-ல் ஆண்ட்ராய்டு 9 பை-ல் இயங்குகிறது. இந்த போன் 6.4 இன்ச் ஃபுல் எச்டி + சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. போனில் எக்ஸினோஸ் 9611 செயலி உள்ளது. இதில் 6 ஜிபி ரேம் இனணைக்கப்பட்டுள்ளது.
போனின் மூன்று பின்புற கேமரா அமைப்பில், 48 மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் சென்சார் ஆகியவை உள்ளது. போனில் 32 மெகாபிக்சல் முன் கேமராவும் உள்ளது. இதில், 128 ஜிபி ஆன் போர்டு ஸ்டோரேஜ் உள்ளது. இதனை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். இந்த போனில் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் உதவியுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்