Photo Credit: Flipkart
ஃப்ளிப்கார்ட் நிறுவனம், தனது சம்மர் சேலை முடித்து இன்னும் ஒரு சில நாட்கள் கூட ஆகாத நிலையில், அடுத்த அதிரடி விற்பனை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ‘பிக் ஷாப்பிங் டேஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விற்பனை வரும் மே 15 ஆம் தேதி ஆரம்பமாகிறது. மே 19 ஆம் தேதி வரை நடக்கும் இந்த தள்ளுபடி விற்பனையில் மொபைல் போன்களுக்காக பல அதிரடி தள்ளுபடிகளை வெளியிட்டுள்ளது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். அப்படி என்ன போன்களுக்கு என்ன சலுகைகள், மொபைல் போன்களை எவ்வளவு விலை குறைத்து விற்பனை செய்யவுள்ளது?
"மொபைல் போன்கள் - என்றும் இல்லாத அளவு குறைந்த விலையில்" என்ற வாசகங்களுடன், தன் "பிக் ஷாப்பிங் டேஸ்" விற்பனைக்கான டீசர் பக்கத்தை வெளியிட்டுள்ளது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். அந்த பக்கத்தில், சாம்சங் கேலக்சி J6 (Samsung Galaxy J6) என்றும் இல்லாத அளவில் குறைந்த விலையில் விற்பனைக்கு வைக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது. 10,999 ரூபாய் மதிப்புள்ள அசுஸ் ஜென்போன் மேக்ஸ் Pro M1(Asus ZenFone Max Pro M1) என்றும் இல்லாத குறைந்த விலையில் ரூபாய் 7,999 கிடைக்கும் என ஃப்ளிப்கார்ட் நிறுவனம் கூறியுள்ளது.
இந்த "பிக் ஷாப்பிங் டேஸ்" விற்பனையின் ஒரு பகுதியாக, ரியல்மீ C1(Realme C1)-ன் விலையை ரூபாய் 6,999 ஆக குறைத்துள்ளது. ரெட்மி நோட் 7 (4GB + 64GB) ஸ்மார்ட்போனின் விலையை, 11,999 ஆக நிர்ணயித்துள்ளது. மேலும், இந்த விற்பனையில் ஓப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட்போனான ஓப்போ K1(Oppo K1) 4GB + 64GB அளவு கொண்ட இந்த ஸ்மார்போனின் விலை ரூபாய் 14,490. மேலும், இந்த போன் "No cost EMI" வசதி மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
நோக்கியா போன்களுக்கும் சலுகைகளை வழக்கியுள்ள இந்த நிறுவனம், இந்த விற்பனையில், நோக்கியா 5.1 Plus-வின் நிலை 7,999 ரூபாயும், நோக்கியா 6.1 Plus-வின் விலை 12,999 ரூபாய்க்கு விற்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
ஹானர் போன்களுக்கும் பல சலுகைகளை அளிக்கிறது இந்த விற்பனை. ஹானர் 10 லைட்(Honor 10 Lite)-இன் விலை ரூபாய் 12,999 எனவும், ஹானர் 9 லைட்(Honor 9 Lite)-இன் விலை 7,999 ரூபாய் எனவும் மற்றும் ஹானர் 8X(Honor 8X)-இன் விலையை ரூபாய் 14,999 ஆகவும் குறைத்து விற்பனைக்கு வைத்துள்ளது.
மேலும் புதியதாக வெளிவந்துள்ள ரெட்மி நோட் 7 Pro(Redmi Note 7 Pro), ரியல்மி 3 Pro(Realme 3 Pro) மற்றும் ரியல்மி C2(Realme C2) ஆகிய போன்களுக்கு ப்ளாஷ் சேலையும் அறிவித்துள்ளது. ஆனால், இந்த ஸ்மார்ட்போன்களின் விலையில் எந்த சலுகையுமின்றி ரெட்மி நோட் 7 Pro ரூபாய் 13,999-கும், ரியல்மி 3 Pro ரூபாய் 13,999-கும் மற்றும் ரியல்மி C2 5,999 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.
மேலும், பல போன்களுக்கு சலுகைகளை அளித்துள்ள இந்த விற்பனையில், வருகின்ற மே 11, 12, 13 ஆகிய தேதிகளில் இன்னும் பல சலுகைகளை அறிவிக்கவுள்ளது. மே 11-ஆம் தேதியான நாளை, விலையுயர்ந்த போன்கள் மற்றும் பட்ஜெட் போன்களுக்கான சலுகைகளை அறிவிக்கவுள்ளது. மே 12-ஆம் தேதி அசுஸ் போன்கள் மற்றும் சில மக்களை அதிகம் கவர்ந்த ஸ்மார்ட்போன்களுக்கான சலுகைகளை அறிவிக்கவுள்ளது. மற்றும் மே 13-ஆம் தேதி சில கைகளுக்கு அடக்கமான போன்களுக்கான வெற்றிகரமான சலுகைகளையும், ஓப்போ A3s-ற்கான சலுகையையும் அறிவிக்கவுள்ளது.
ஐபோன்களுக்கான சிறந்த சலுகைகளையும் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். அதுமட்டுமின்றி ஒவ்வொரு நாளும், ஹானர் போன்களுக்கான புதுப்புது சலுகைகளை அறிவிக்கவுள்ளது.
இன்னும் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள இந்த விற்பனையில், நீங்கள் பெரும் ஒவ்வொரு மொபைல்போனையும் எச் டி எப் சி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாக பணம் செலுத்தி பெற்றுக்கொண்டால், மொபைல்போனின் விலையிலிருந்து 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும். மேலும், உங்கள் ஸ்மார்ட்போன்களுக்கான பல தரமான போன்கவர்களை இந்த விற்பனையில் வெறும் 99 ரூபாய்க்கு விற்கவுள்ளது இந்த நிறுவனம். எனவே மக்களே, இந்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டுவிடாதீர்கள்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்