Flipkart Big Shopping Days Sale 2019 - டிசம்பர் 1-ல் ஆரம்பம் - ஆஃபர் விவரம் உள்ளே!

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
Flipkart Big Shopping Days Sale 2019 - டிசம்பர் 1-ல் ஆரம்பம் - ஆஃபர் விவரம் உள்ளே!

Flipkart Big Shopping Days sale டிசம்பர் 1-5 வரை நடைபெறும்

ஹைலைட்ஸ்
  • Flipkart Big Shopping Days sale டிசம்பர் 1 முதல் தொடங்கும்
  • Flipkart sale வங்கி வாடிக்கையாளர்களுக்கு உடனடி தள்ளுபடியை வழங்கும்
  • முக்கிய ஒப்பந்தங்கள் & சலுகைகளை வெளிப்படுத்த microsite உருவாக்கியுள்ளது
விளம்பரம்

Flipkart Big Shopping Days Sale 2019 ஆம் ஆண்டில் மற்றொரு தோற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது, இ-காமர்ஸ் நிறுவனம் தேதிகளை அறிவித்து, தொடக்கத்திற்கு முன்னதாக சில சலுகைகளை முன்னோட்டமிடுகிறது. இந்த பிளிப்கார்ட் விற்பனை, ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், டிவிகள் மற்றும் மடிக்கணினிகளில் பல தயாரிப்பு வகைகளில் ஒப்பந்தங்கள், தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்கும். டிசம்பர் 1, ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஐந்து நாள் விற்பனையில் Realme 5, Samsung Galaxy S9 மற்றும் Apple iPhone 7 ஆகியவற்றில் தள்ளுபடி விலைகளைக் கொண்டுவரும். டி.வி.க்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு 75 சதவீதம் தள்ளுபடியும், மடிக்கணினி மற்றும் கேமராக்களுக்கு 80 சதவீதம் தள்ளுபடியும் வழங்கும் என்று பிளிப்கார்ட் கூறுகிறது. மேலும், Flipkart Big Shopping Days sale-ல் பங்கேற்கும் HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு, HDFC வங்கி கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகள் மூலம் வாங்கினால் 10 சதவீத உடனடி தள்ளுபடியை கிடைக்கும்.

பிளிப்கார்ட் வெளியிட்ட மைக்ரோசைட்டின் (microsite) படி, பிக் ஷாப்பிங் நாட்கள் விற்பனை (Big Shopping Days Sale) டிசம்பர் 1 முதல் டிசம்பர் 5 வரை நடைபெறும். பிளிப்கார்ட் பிளஸ் (Flipkart Plus) உறுப்பினர்கள் நவம்பர் 30 சனிக்கிழமை இரவு 8 மணி முதல் விற்பனைக்கான ஆரம்ப அணுகலைப் பெறுவார்கள்.


Flipkart Big Shopping Days sale-ல் மொபைல் போன் சலுகைகள்:

மொபைல் போன்களில் முக்கிய சலுகைகளைப் பொறுத்தவரை, பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேலில் (Flipkart Big Shopping Days Sale) Realme 5, Realme X, Samsung Galaxy S9, Samsung Galaxy S9+, Google Pixel 3a, Apple iPhone 7 மற்றும் Asus 5Z ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடியைக் கொண்டுவரும்.

ஸ்மார்ட்போன்
 வழக்கமான தொடக்க விலை (ரூ.)  
  தள்ளுபடி விலை  (ரூ.)  
Realme 5 9,999 8,999
Realme X 16,999 15,999
Samsung Galaxy S9 29,999 27,999
Samsung Galaxy S9+ 37,999 34,999
Google Pixel 3a 34,999 29,999
Apple iPhone 7 27,999 24,999
Asus 5Z 16,999 15,999


பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனையானது (Flipkart Big Shopping Days sale) iPhone 11 சீரிஸ் உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட்போன்களில் ப்ரீபெய்ட் தள்ளுபடிகள் மற்றும் no-cost EMI ஆப்ஷன்களும் அடங்கும்.

Also seeAmazon Fab Phones Fest 2019 Sale Goes Live With Offers on iPhone XR, OnePlus 7T, Honor 20, and More

டிவிகள், மடிக்கணினிகளில் மற்றும் பல தயாரிப்பு வகைகளில் தள்ளுபடியைக் கொண்டுவரும் Flipkart Big Shopping Days Sale

மொபைல் போன் சலுகைகளைத் தவிர, டி.வி மற்றும் வீட்டு உபகரணங்களுக்கு 75 சதவிகிதம் தள்ளுபடியை பிளிப்கார்ட் விற்பனை கொண்டுவருவதோடு, no-cost EMI ஆப்ஷன்ஸ் மற்றும் முழுமையான பாதுகாப்பையும் வழங்குகிறது. கேமிங் மடிக்கணினிகளில் 40 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்படுவதோடு, DSLR-கள் மற்றும் டிஜிட்டல் கேமராக்களில் ரூ. 10,000 வரை எக்ஸ்சேஞ் தள்ளுபடி மற்றும் Boat & JBL போன்ற பிராண்டுகளிலிருந்து ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி ஆகியவை இந்த விற்பனையில் அடங்கும்.

பிக் ஷாப்பிங் நாட்கள் விற்பனையின் (Big Shopping Days sale) போது, பிளிப்கார்ட் "Blockbuster Deals" மற்றும் புதிய சலுகைகளை காலை 12 மணி, காலை 8 மணி மற்றும் மாலை 4 மணிக்கு நடத்த உள்ளது. இதேபோல், அதிகாலை 2 மணி வரை "Rush Hours" இருக்கும்.

வரலாற்று பதிவுகளை கருத்தில் கொண்டு, வரவிருக்கும் பிளிப்கார்ட் விற்பனையை (Flipkart sale) எதிர்கொள்ள, அமேசான் இந்தியா (Amazon India ) தனது கிரேட் இந்தியன் விற்பனையை (Great Indian Sale) நடத்த வாய்ப்புள்ளது. அமேசான் விற்பனையைச் சுற்றியுள்ள சில அதிகாரப்பூர்வ விவரங்களையும், பிளிப்கார்ட் விற்பனையின் கீழ் சில கவர்ச்சிகரமான சலுகைகளையும், எதிர்வரும் நாட்களில் எதிர்பார்க்கலாம்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. WhatsApp Status வைத்தால் Facebook, Instagram போகும்! அதிரி புதிரி அப்டேட்
  2. Redmi K90 Pro செல்போன் மிரள விடும் அம்சங்களுடன் வருகிறது
  3. இந்தியாவுக்கு வரும் புது iQOO போன் எல்லாமே சும்மா மெர்சல் ரகம்
  4. அண்டத்தை கண்காணிக்கும் சிசிடிவியா இந்த ஹபிள் தொலைநோக்கி?
  5. இது மட்டும் தெரிந்திருந்தால் Samsung Galaxy S25 செல்போனே வாங்கி இருப்பேனே
  6. வீடியோ செம்மயா வரும்! Instagram தரப்போகும் செம்ம எடிட் வசதிகள்
  7. ரூபாய் 1 லட்சத்துக்கு கீழ் பட்ஜெட்டில் தரமான லேப்டாப் வேண்டுமா
  8. பட்ஜெட் விலையில் கிடைக்கும் Air Conditioners இப்போ விட்டா அவ்வளோ தான்
  9. பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு Amazon Great Republic Day Sale 2025 ஆபர்
  10. Amazon Great Republic Day Sale 2025: ஸ்மார்ட் டிவிகளில் அதிரடி விலைகுறைப்பு
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »