Samsung Galaxy S25 Ultra, Galaxy S25+ மற்றும் Galaxy S25 விலை விவரங்கள் Galaxy Unpacked விழாவில் வெளியாகிறது
Photo Credit: Samsung
Samsung Galaxy S24 Ultra ஆரம்ப விலை ரூ. 1,29,999
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போ நாம் பார்க்க இருப்பது Samsung Galaxy S25 சீரியஸ் செல்போன்கள் பற்றி தான்
Samsung Galaxy S25 Ultra, Galaxy S25+ மற்றும் Galaxy S25 விலை விவரங்கள் Galaxy Unpacked விழாவில் வெளியாகிறது. இந்த விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தியாவில் உள்ள Galaxy S24 செல்போன் சீரியஸ்களை விட புதிய Samsung Galaxy S25 சீரியஸ் செல்போன்கள் விலை உயர்ந்ததாக இருக்கும்.
சாம்சங் கேலக்ஸி S25 தொடரின் இந்திய விலை 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் கொண்ட பேஸிக் மாடல் 84,999 ரூபாய் விலையில் ஆரம்பம் ஆகிறது. 12GB ரேம்+512GB மெமரி மாடல் விலை ரூ. 94,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவே கடந்த ஆண்டு கேலக்ஸி எஸ்24 8ஜிபி ரேம்+128ஜிபி மெமரி மாடல் 74,999 ரூபாய் என்கிற அளவில் மட்டும் தான் இருந்தது.
மறுபுறம் Samsung Galaxy S25+ விலை 12ஜிபி ரேம்+256ஜிபி மெமரி மாடல் 1,04,999 ரூபாய். Galaxy S24+ ஆரம்ப விலை மாடல் விலை 99,999 ரூபாய். 12ஜிபி ரேம்+512ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 1,14,999.
டாப்-எண்ட் Samsung Galaxy S25 Ultra மாடல் 12ஜிபி ரேம்+256ஜிபி மெமரி மாடல் விலை 1,34,999 ரூபாய் 16ஜிபி ரேம்+512ஜிபி மெமரி மாடல் விலை ரூ.1,44,999 மற்றும் டாப்-ஆஃப்-லைன் 16GB ரேம்+1TB மெமரி மாடலின் விலை ரூ. 1,64,999 ஆகும். Galaxy S24 Ultra மாடல் உடன் ஒப்பிடுகையில்பேஸிக் மாடல் 256ஜிபி மெமரி 1,29,999 ரூபாய் வருகிறது.
சாம்சங் புதிய செல்போன் சீரியஸ் அனைத்து வகைகளுக்கும் சிறிது விலை உயர்வுடன் வரலாம் என தெரிகிறது. புதிய ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை கொண்டு அவை தயாரிக்கப்படுகிறது. இது சாம்சங் ஸ்மார்ட்போன்களின் விலையை கடந்த ஆண்டு மாடல்களை விட அதிகமாக உயர்த்துவதற்கான முக்கிய காரணியாக கருதப்படுகிறது.
சாம்சங் தனது கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை ஜனவரி 22 அன்று நடத்த உள்ளது. நிறுவனம் தற்போது இந்தியாவில் புதிய கேலக்ஸி எஸ் சீரிஸ்
ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவுகளை நிறுவனத்தின் இந்திய இணையதளம், சாம்சங் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோர்ஸ் மற்றும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்கள் மூலம் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
The Offering Is Streaming Now: Know Where to Watch the Supernatural Horror Online
Lazarus Is Now Streaming on Prime Video: Know All About Harlan Coben's Horror Thriller Series