Photo Credit: iQOO
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போ நாம் பார்க்க இருப்பது iQOO Neo 10R 5G செல்போன் பற்றி தான்
iQOO Neo 10R 5G செல்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என தெரியவந்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் ரூ. 30,000 பட்ஜெட்டில் வருகிறது. நியோ 10 மற்றும் நியோ 10 ப்ரோ போன்களை உள்ளடக்கிய iQOO Neo 10 செல்போன் சீரியஸ்சாக இது வருகிறது. ஆனால் தற்போது சீனாவில் மட்டுமே கிடைக்கிறது. iQOO Neo 10R 5G இந்தியாவில் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8s ஜெனரல் 3 சிப்செட்டுடன் 12ஜிபி வரை ரேம் கொண்டதாக அறிமுகமாகலாம்.
பிப்ரவரியில் இந்த ஃபோன் அறிமுகப்படுத்தப்படலாம். ப்ளூ ஒயிட் ஸ்லைஸ் மற்றும் லூனார் டைட்டானியம் என இரண்டு வண்ணங்களில் விற்பனை செய்யப்படலாம்.
விலை நிர்ணயத்தைப் பொறுத்தவரை, இது சந்தையில் 30 ஆயிரம் ரூபாய் விலைக்குள் கிடைக்கும். மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ மற்றும் புதிய Poco X7 ப்ரோ போன்றவற்றுடன் போட்டியிடும் என தெரிகிறது. இருப்பினும், iQOO செல்போன் அனைத்து மாடல்களும் இந்த விலையின் கீழ் வருமா என்பது தெளிவாக தெரியவில்லை.
iQOO Neo 10R 5G ஆனது 6.78-இன்ச் AMOLED திரையை கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்று சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். இது ஸ்னாப்டிராகன் 8s ஜெனரல் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம்.
8ஜிபி ரேம்+256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் +256ஜிபி மெமரி ஆகிய இரண்டு மாடல்களில் வருகிறது. 50-மெகாபிக்சல் சோனி LYT-600 சென்சார் கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர் கேமரா ஆகியவற்றை உள்ளடக்கிய இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டதாக இருக்கும். செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 16 மெகாபிக்சல் முன் கேமராவும் இருக்கலாம். iQOO Neo 10R 5G ஆனது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் 6,400mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்