ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களின் கோடை விற்பனையின் இறுதி நாள், நீங்கள் தவர விடக்கூடாத சில சலுகைகள்
Photo Credit: Amazon India
ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களின் கோடை விற்பனையின் இறுதி நாள்
கடந்த மே 4-ஆம் தேதி அன்று ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இரு நிறுவனங்களும் தங்களின் கோடைகால சலுகை விற்பனையைத் துவங்கியது. மே 7-ஆம் தேதி வரை இந்த சலுகை விற்பனை நீடிக்கும் என அறிவித்திருந்த இந்த இரு நிறுவனங்களும், இன்று அந்த விற்பனையின் இறுதி நாளில் இருக்கிறது. இந்த விற்பனையில் மொபைல்போன்கள், லேப்டாப்கள் மற்றும் பல மின்னணு சாதனங்களுக்கு சலுகைகளை அளித்திருந்தது. அந்த சலுகைகள் இன்று இரவு 11:59 PM நேரத்துடன் முடிவடைய இருக்கிறது. அந்த நேரத்திற்குள் நீங்கள் தவர விடக்கூடாத சில சிறந்த சலுகைகள்.
ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களின் கோடை விற்பனை: இறுதி நாளின் சிறந்த சலுகைகள்
ஏசெர் நைட்ரோ AN515-52 கேமிங் லேப்டாப் (Acer Nitro AN515-52 gaming laptop)
15.6 இன்ச் FHD திரை, 8GB RAM, 1TB சேமிப்பு அளவு, இன்டெல் கோர் i5 அமைப்பு என பல அற்புதமான அம்சங்களை கொண்ட இந்த லேப்டாப்பின் சந்தை விலை ரூபாய் 89,999. ஆனால் இந்த அமேசான் கோடை விற்பனையில் இந்த லேப்டாப்பை நீங்கள் ரூபாய் 59,990-க்கு பெற்றுக்கொள்ளலாம். மேலும் உங்கள் பழைய லேப்டாப்பை எக்ஸ்சென்ஜ் செய்து ரூபாய் 18,050 வரையில் தள்ளுபடி பெறலாம்.
டீ சி எல் 43-இன்ச் 4K ஸ்மார்ட் டிவி (TCL 43-inch 4K smart LED TV)
43-இன்ச் அளவு கொண்டு இந்த 4K வசதியுடைய டீ சி எல் ஸ்மார்ட் டிவி, சந்தையில் ரூபாய் 48,990-க்கு விற்பனையில் இருந்தாலும், அதை ரூபாய் 23,999-க்கு விலை குறைப்பு செய்து விற்பனைக்கு வைத்துள்ளது அமேசான் நிறுவனம். இந்த டிவி 18 மாத வாரன்டி வசதியுடன் அமேசானில் கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி M20 (Samsung Galaxy M20)
5000mAh பேட்டரி, 3x அதிவேக சார்ஜ், 15W Type-C அதிவேக சார்ஜர், இரண்டு பின்புற கேமரா(13MP + 2MP), 8MP முன்புற கேமரா, 3GB + 32GB மெமரி , 6.3 inch முழு HD, 'V' நாட்ச் திரை போன்ற பல அம்சங்களை கொண்ட இந்த சம்சங் கேலக்ஸி M20, அமேசானின் விலை ரூபாய் 9,990.
ஒன்ப்ளஸ் 6T (OnePlus 6T)
அமேசான் கோடை விற்பனையில் ஒன்ப்ளஸ் 6T(6GB, 128GB) தள்ளுபடி விலை ரூ.32,999 (MRP Rs.41,999). இந்த ஸ்மார்ட்போனின் தற்போதைய சந்தை விலை ரூ.37,999 மேலும் நீங்கள் எஸ்பிஐ டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலமாக பணம் செலுத்தி இந்த ஸ்மார்ட்போனை பெற்றால் இன்னும் கூடுதலாக Rs.1,500 ரூபாய் இதன் விற்பனை விலையில் இருந்து தள்ளுபடி கிடைக்கும். அந்த தள்ளுபடி போக ரூ.31,499/- ரூபாய்க்கு இந்த போனை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
ரியல்மி 2 ப்ரோ (Realme 2 Pro)
6.3 inch முழு HD, 'V' நாட்ச் திரை, இரண்டு பின்புற கேமரா (16MP + 2MP), 16MP முன்புற செல்ஃபி கேமரா, 3500mAh பேட்டரி, 4GB + 64GB மேமரி, ஸ்னேப்ட்ராகன் 660 அமைப்பு போன்ற அம்சங்கள் கொண்ட ரியல்மி 2 Pro-வின் ஃப்ளிப்கார்ட் விற்பனை விலை ரூபாய் 10,990.
சோனி WH-1000XM3 வயர்லெஸ் ஹெட்போன் (Sony WH-1000XM3 wireless headphones)
முழுதாக சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் வரை தாங்கும் பெட்டரி, 5 மணி நேர இயக்கத்திற்கு 10 நிமிட சார்ஜ், வெளி சத்தத்தை முற்றிலும் குறைக்கும் வசதி என உங்கள் சார்ஜ் நேரத்தை குறைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஹெட்போன் அமேசானில் ரூபாய் 26,990 விற்பனைக்கு உள்ளது. இதன் சந்தை விலை ரூபாய் 29,990.
ஃபயர் டிவி ஸ்டிக் 4K (Fire TV Stick 4K)
வாய்ஸ் மூலமாக தொலைக்காட்சியை கட்டுப்படுத்தும் வசதி ஏற்படுத்தி தரும் இந்த ஃபயர் டிவி ஸ்டிக்-ஐ ரூபாய் 5,999-ல் இருந்து, 1000ரூபாய் விலை குறைத்து, ரூபாய் 4,999 விற்பனைக்கு வைத்துள்ளது அமேசான் நிறுவனம்.
சோனி ப்ளேஸ்டெசன் 4 (Sony PlayStation 4)
ரூபாய் 28,580 மதிப்பு கொண்ட இந்த சோனி ப்ளேஸ்டெசன் 4-ஐ ஃப்ளிப்கார்ட் நிறுவனம் இந்த கோடை விற்பனையில் ரூபாய் 22,190 என்ற விலை குறைப்பு செய்து விற்பனைக்கு வைத்துள்ளது. இந்த ப்ளேஸ்டெசன் 500GB சேமிப்பு அளவு கொண்டு அமைந்திருக்கும்.
மேலும் ரூபாய் 597 ஆக இருந்த அமேசான் கிண்டில்-காண மூன்று மாத சந்தாவை ரூபாய் 99 ஆக குறைத்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Scientists Unveil Screen That Produces Touchable 3D Images Using Light-Activated Pixels
SpaceX Expands Starlink Network With 29-Satellite Falcon 9 Launch
Nancy Grace Roman Space Telescope Fully Assembled, Launch Planned for 2026–2027
Hell’s Paradise Season 2 OTT Release Date: When and Where to Watch it Online?