ஒரே நேரத்தில் மொபைல் போன்களுக்கான சலுகைகளை அறிவித்துள்ள அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் பெருநிறுவனங்கள்.
ஃப்லிப்கார்ட் மற்றும் அமேசானின் கோடைகால விற்பனை
வெகு நாட்களாக பழைய ஸ்மார்ட் போனையே பயன்படுத்திக்கொண்டு இருக்கிறீர்களா. புதிய ஸ்மார்ட்போனுக்கு மாற வேண்டும் என்று எண்ணுகிறீர்களா. இதுதான் சரியான தருனம். வருகிறது ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களின் ஆன்லைன் கோடை விற்பனை. ஒரே நேரத்தில் மொபைல் போன்களுக்கான சலுகைகளை அறிவித்துள்ள இந்த இரண்டு ஆன்லைன் பெரு நிறுவனங்களும் பல ஸ்மார்ட்போன்களுக்கும் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் குறிப்பிடத்தக்க சில ஸ்மார்ட்போன்கள் ரியல்மி U1, ஆப்பிள் ஐபோன் XR மற்றும் சாம்சங் கேலக்ஸி M20.
சலுகை விலையிலான இந்த ஸ்மார்ட்போன்கள் மே 7-ஆம் தேதி வரை ஆன்லைனில் கிடைக்கும் என்று இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளது. இது மட்டுமின்றி இந்த இரு நிறுவனங்களும் எக்ஸ்சேன்ஜ் ஆஃபர்களையும் வழங்கியுள்ளது. மேலும் அமேசானில், SBI டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி மொபைல் போன்களை வாங்கினால் உடனடி 10 சதவிகித தள்ளுபடியைப் பெறலாம் (ஆதிகபட்சம் ரூ.1,500). அமேசான் நிறுவனம் எக்ஸ்சேன்ஜ் செய்ய இருக்கும் ஸ்மார்ட்போனின் செயல்பாடு மற்றும் தரத்தைப் பொறுத்து அதிகபட்சமாக ரூ.7,850 எக்ஸ்சேன்ஜ் விலையாக நிர்ணயித்துள்ளது.
ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசானின் கோடை விற்பனையின் ஹைலைட்ஸ்:
தற்போது அமேசான் கோடை விற்பனையில், இந்த ரியல்மி U1-இன் விலை Rs.8,999(MRP Rs.12,999). இது தற்போது உள்ள இதன் ஆன்லைன் விலையை விட 1000 ரூபாய் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், உங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்றி இந்த போனை பெற்றுக்கொண்டால், Rs.7,850 வரை விலை குறைவில் இந்த மொபைல் போனை பெற்றுக்கொள்ளலாம்.
இதன் சில சிறப்பம்சங்கள்,
*6.3 inch முழு HD திரை
*இரண்டு பின்புற கேமரா(13MP + 2MP)
*25MP முன்புற செல்பி கேமரா
*3500mAh பேட்டரி
*3GB + 32GB மேமரி
இந்த ஸ்மார்ட்போனுக்கான எங்கள் விமர்சனத்தில், 8/10 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இந்த போனின் மொத்த செயல்பாடு திருப்திகரமாக இருந்தது. ஆனால், இந்த போனின் கேமராகள், ஒளி குறைவான நேரங்களில், நல்ல புகைப்படங்களை எடுக்கத் தவறுகிறது.
விலை: Rs.8,999(MRP Rs.12,999).
அமேசான் நிறுவனம் முதல் முறையாக இதன் விற்பனை விலையை, இந்த கோடை கால விற்பனைக்காக குறைத்துள்ளது. மே 7-ஆம் தேதி வரை, அமேசான் நிறுவனத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விலை Rs.9,990(MRP Rs.10,990).
இந்த போனின் சில சிறப்பம்சங்கள்,
*5000mAh பேட்டரி, 3x அதிவேக சார்ஜ், 15W Type-C அதிவேக சார்ஜர்
*இரண்டு பின்புற கேமரா(13MP + 2MP)
*3GB + 32GB மேமரி
*6.3 inch முழு HD, 'V' நாட்ச் திரை
*8MP முன்புற கேமரா
இந்த ஸ்மார்ட்போன் எங்கள் தர மதிப்பீட்டில் 8/10 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இதன் திரை சிறப்பாக உள்ளது. நீண்ட நேரம் தாங்கக்கூடிய பேட்டரி. இருந்தாலும் இதன் கேமரா அம்சங்களை சற்றே மேம்படுத்தியிருக்கலாம்.
விலை: Rs.9,990(MRP Rs.10,990)
ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு ஆஃபர்களை அறிவித்துள்ளது. ஆன்லைன் சந்தையில் Rs.59,900 ரூபாய்க்கு விற்பனையில் உள்ள இந்த ஸ்மார்ட்போனை இரு வேறு விலைகளில் விற்பனைக்கு வைத்துள்ளது இந்த இரண்டு நிறுவனங்கள்.
அமேசானில் Rs.1,000 ரூபாய் விலைகுறைப்பு செய்து Rs.58,900 ரூபாய்க்கு விற்பனைக்கு வைத்துள்ளது. மேலும், ஒருவேளை நீங்கள் ஆன்லைன் பரிமாற்றம் மூலம் SBI கார்டுகளை கொண்டு பணம் செலுத்தினால் இன்னும் ஒரு Rs.1,500 தள்ளுபடி பெறலாம். அதிகபட்ச விலை குறைப்பாக இந்த ஸ்மார்ட்போனை Rs.57,400 ரூபாய்க்கு அமேசானில் பெற்றுக்கொள்ளலாம்.
அதே சமையம் இந்த போனை நீங்கள் ஃப்ளிப்கார்ட்டில் பெற விரும்பினால், இதன் விலை Rs.59,900 ஆகவே இருக்கும். ஒருவேளை, ஃப்ளிப்கார்ட்டில், ஆன்லைன் பரிமாற்றம் மூலம் பணம் செலுத்தி இந்த மொபைல்போனை பெற்றால், இதன் விலை Rs.53,910 ரூபாயாக குறைய வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், ஃப்ளிப்கார்ட் நிறுவனம், இந்த கோடை விற்பனையில், HDFC கார்டுகளைக் கொண்டு பணம் செலுத்துபவர்களுக்கு 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடி என அறிவித்துள்ளது. எனவே, அந்த 10 சதவிகித தள்ளுபடி Rs.5,990 ரூபாய் போக இந்த ஸ்மார்ட்போனை Rs.53,910 ரூபாய்க்கு ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
விலை: ஃப்ளிப்கார்ட்டில் Rs.53,910 (* HDFC கார்டுகளைக் கொண்டு பணம் செலுத்தினால்), அமேசானில் Rs.57,400 (*SBI கார்டுகளை கொண்டு பணம் செலுத்தினால்)
அமேசான் கோடை விற்பனையில் ஒன்பிளஸ் 6T(6GB, 128GB) தள்ளுபடி விலை Rs.32,999 (MRP Rs.41,999). இந்த ஸ்மார்ட்போனின் தற்போதைய சந்தை விலை Rs.37,999 மேலும் நீங்கள் SBI டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலமாக பணம் செலுத்தி இந்த ஸ்பார்ட்போனை பெற்றால் இன்னும் கூடுதலாக Rs.1,500 ரூபாய் இதன் விற்பனை விலையில் இருந்து தள்ளுபடி கிடைக்கும். அந்த தள்ளுபடி போக Rs.31,499/- ரூபாய்க்கு இந்த போனை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்து இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் பெற்றால் உங்களுக்கு அதிகபட்சமாக Rs.7850/- ரூபாய் போனின் விற்பனை விலையில் இருந்து தள்ளுபடி கிடைக்கும்.
விலை: Rs.32,999/-(MRP Rs.41,999/-).
ஆப்பிள் ஐபோன் X-ஐ விற்பனைக்கு வைத்துள்ள ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இரு தளங்களும் தங்கள் விற்பனை விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் வைத்துள்ளது. இரு தளங்களிலும் இந்த ஸ்மார்ட்போன் Rs.69,999 ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது. எக்ஸ்சேன்ஜ் ஆப்பர்கள் மற்றும் பணப் பரிமாற்றத்தில் கிடைக்கும் தள்ளுபடிகளைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போனை எந்த தளத்தில் பெறலாம் என நீங்களே முடிவெடுத்துக்கொள்ளலாம்.
ஃப்ளிப்கார்ட்டில், HDFC கார்டுகள் மூலம் பணம் செலுத்தி மொபைல்போனை பெருபவர்களுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும். அதே சமையம் அமேசான், SBI கார்டு பரிமாற்றங்களுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கியுள்ளது. ஆனால் அமேசான் அதிகபட்சமாக Rs.1,500 மட்டுமே தள்ளுபடி வழங்குகிறது. மேலும், அமேசான் நிறுவனத்தை ஒப்பிடுகையில், ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் எக்ஸ்சேன்ஜ் ஆப்பர்கள் சற்று அதிகமாகவே உள்ளது.
அமேசான் கோடை விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு Rs.5,000/- கேஷ்பேக் வழங்கியுள்ளது. ஹானர் வியூ 20 6GB + 128GB வகையை அமேசானில் நீங்கள் Rs.37,999/- (MRP Rs.42,999) என்ற விலைக்கு பெற்றுக்கொள்ளலாம். மேலும் இந்த போனுக்கு எக்ஸ்சேன்ஜ் மற்றும் பணப் பரிமாற்ற தள்ளுபடிகளும் அடங்கும். அவ்வகையில் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை இன்னும் குறைந்த விலைக்கே பெற்றுக்கொள்ளலாம்.
எங்கள் மதிப்பீட்டில் இந்த ஸ்மார்ட்போன் 8/10 மதிப்பெண்கள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விலை: Rs.37,999/- (MRP Rs.42,999)
ஃப்ளிப்கார்ட் நிறுவனம் கோடை கால விற்பனையில், இந்த ஸ்மார்ட்போனான நோக்கியா 6.1 ப்ளஸ்(4GB +64GB)-ஐ Rs.12.999 ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் MRP Rs.17,600. அதே நேரம், அமேசானில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விலை Rs.14,499. எக்ஸ்சேன்ஜ் ஆப்பர் மற்றும் HDFC கார்டு பணப் பரிமாற்ற்த்தில் 10 சதவிகித தள்ளுபடி என இந்த ஸ்மார்ட்போனின் விலையில் அதிகபட்சமாக Rs.11,950 தள்ளுபடி பெறலாம்.
நோக்கியா 6.1 ப்ளஸ் சில சிறப்பம்சங்கள்,
*4GB +64GB
*5.8" முழு HD திரை
*ஸ்னேப்ட்ராகன் 636 அமைப்பு
*இரண்டு பின்புற கேமரா(13MP + 2MP)
*16MP முன்புற செல்பி கேமரா
*3060mAh பேட்டரி
ஆகிய அம்சங்களை கொண்ட இந்த ஸ்மார்ட்பொனை நாங்கள் சோதனை செய்ததில் பெற்ற பதிப்பெண் 8/10.
விலை:ஃப்ளிப்கார்ட்டில் Rs.12,999 (MRP Rs.17,600)
4GB + 64GB வகை கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலையை Rs.10,990 (MRP Rs.14,990) என குறைத்துள்ளது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். 6GB + 64GB என்ற மற்றொரு வகை கொண்ட இதே வகையிலான ஸ்மார்ட்போனின் விலையை Rs.11,950 என நிர்ணயித்துள்ளது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் கிடைக்கும் இந்த மொபைல் போனின் MRP Rs.16,990. இரண்டு ஸ்மார்ட்போன்களையும் எக்ஸ்சேன்ஜ் ஆஃபர்களுடனே விற்பனைக்கு வைத்துள்ளது இந்த நிறுவனம்.
இதன் சில சிறப்பம்சங்கள்,
*6.3 inch முழு HD, 'V' நாட்ச் திரை
*இரண்டு பின்புற கேமரா(16MP + 2MP)
*16MP முன்புற செல்பி கேமரா
*3500mAh பேட்டரி
*4GB + 64GB மேமரி
*ஸ்னேப்ட்ராகன் 660 அமைப்பு
விலை: Rs.10,990 (MRP Rs.14,990)
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Scientists Unveil Screen That Produces Touchable 3D Images Using Light-Activated Pixels
SpaceX Expands Starlink Network With 29-Satellite Falcon 9 Launch
Nancy Grace Roman Space Telescope Fully Assembled, Launch Planned for 2026–2027
Hell’s Paradise Season 2 OTT Release Date: When and Where to Watch it Online?