Apple நிறுவனம் இந்தியாவில் புதிய AppleCare+ Coverage Options-ஐ அறிவித்துள்ளது
Photo Credit: Apple
AppleCare+ இந்தியாவில் திருட்டு மற்றும் இழப்புப் பாதுகாப்புடன் வருகிறது
உங்க iPhone-ஐ பத்திரமா வச்சிருக்கீங்களா? இப்போ Apple நிறுவனம், இந்தியால அவங்களுடைய AppleCare+ திட்டத்துல ஒரு பெரிய அப்டேட்டைக் கொண்டு வந்திருக்காங்க. இது iPhone யூஸர்களுக்கு ரொம்பவே முக்கியமான செய்தி. முக்கியமான அப்டேட் என்னன்னா, AppleCare+ with Theft and Loss என்ற புதிய திட்டம் அறிமுகமாகியிருக்கு. இதன் மூலம், உங்க iPhone திருடு போனாலோ அல்லது தொலைந்து போனாலோ, அதுக்கு பாதுகாப்பு (Coverage) கிடைக்கும். ஆண்டுக்கு இரண்டு முறை திருட்டு அல்லது இழப்பு ஏற்பட்டால், ஒரு சர்வீஸ் கட்டணம் செலுத்தி, நீங்க புதிய போனைப் பெறலாம். இதுதான் இந்த திட்டத்தின் பெரிய ஹைலைட். இப்போ வரைக்கும் AppleCare+-ல வருடாந்திர (Annual) திட்டங்கள் மட்டும்தான் இருந்தது. ஆனா, இப்போ Apple, Monthly Plan மற்றும் Annual Plan என ரெண்டு ஆப்ஷன்களையும் அறிமுகப்படுத்தியிருக்காங்க.
மாதாந்திரத் திட்டம்: இதன் விலை ரூ.799/மாதம் முதல் தொடங்குகிறது.
வருடாந்திரத் திட்டம்: இதை ஒரு வருஷத்துக்கு மொத்தமா வாங்கிக்கலாம்.
இந்த மாதாந்திர பிளான் மூலமா, iPhone பயனர்கள் தங்களுடைய வசதிக்கு ஏத்த மாதிரி, பிளானை எவ்வளவு நாள் வேணாலும் தொடரலாம்.
இந்த AppleCare+ திட்டத்தை நீங்க புது iPhone வாங்கும்போதே வாங்கலாம். இல்லன்னா, போன் வாங்கிய 60 நாட்களுக்குள்ள உங்க iPhone Settings ஆப் மூலமா இந்த பிளானை ஆக்டிவேட் பண்ணிக்கலாம்.மொத்தத்துல, AppleCare+ மூலம் Theft and Loss Protection போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் Monthly Plan போன்ற வசதிகள் வந்திருப்பது iPhone யூஸர்களுக்கு ரொம்பவே சந்தோஷமான செய்தி. இந்த Theft and Loss Protection மற்றும் ரூ.799/மாதம் என்ற Monthly Plan உங்களுக்கு பிடிச்சிருக்கா? உங்க iPhone-க்காக இந்த பிளானை வாங்குவீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
YouTube Updates Search Filters With New Shorts Option and Simplified Sorting