பார்தி ஏர்டெல் நிறுவனம் அதன் ரூ.97 ப்ரீபெய்ட் திட்டத்தின் பயன்களை மாற்றி அமைத்து, அதன் நன்மைகளை குறைப்பதாக அறிவித்துள்ளது. முன்னதாக ரூ.97 ப்ளான் 2018-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த திட்டத்தில் அதிகப்பட்சமான சலுகைகளை வழங்கி இந்த வருட தொடக்கத்தில் ஏர்டெல் அறிவித்தது. அதாவது, 14 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ப்ளானில், நாளொன்றுக்கு 2ஜிபி டேட்டாவும், அன்லிமிடெட் கால் வசதியும் கொண்டிருந்தது.
இந்நிலையில், தற்போது இந்த திட்டத்தை மீண்டும் மாற்றி அமைத்துள்ள ஏர்டெல் நிறுவனம், இம்முறை திட்டத்தில் வழங்கி வந்த நன்மைகளை குறைத்து அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, தற்போது, 14 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ப்ளானில், அன்லிமிடெட் கால் வசதியும், நாளொன்றுக்கு 500எம்பி மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட இந்த ரூ.97 ப்ரீபெய்ட் திட்டத்தின் படி, 14 நாட்கள் வேலிடிட்டியுடன், அன்லிமிடெட் கால் வசதியும், உடன் 500MB அளவிலான டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவைகளை வழங்குகிறது. முன்னதாக, இதே ரூ.97 ப்ரீப்பெய்டு ப்ளானில், 2ஜிபி டேட்டாவை வழங்கி வந்தது. இந்த திடீர் மாற்றத்தை ஏர்டெல் நிறுவனம் தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்த தகவலை முதலில் டெலிகாம் டாக் வெளியிட்டது.
முன்னதாக, பாரதி ஆக்சா லைஃப் இன்சூரன்ஸூடன் இணைந்து நாடு முழுவதும் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ப்ரீபெய்ட் திட்டத்துடன் காப்பீட்டு பாதுகாப்பையும் வழங்குவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்தது. அதாவது, ரூ.599 ப்ரிபெய்ட் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 100 எஸ்எம்எஸ், இத்துடன் பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து 4 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீட்டுத் தொகைக்கு இன்சூரன்ஸ் பாலிசியும் கூடுதலாக வழங்க உள்ளது.
இந்த ரூ.599 ரீசார்ஜ் திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும். மேலும் ஒவ்வொரு முறை ரீசார்ஜ் செய்வதன் மூலம் இன்சூரன்ஸ் பாலிசி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தானாகவே புதுப்பித்துக்கொள்ளும் என்றும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் தற்போது தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்கள் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்