Redmi K80 செல்போன் சீரியஸ் இந்த வார இறுதியில் 120W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான சப்போர்ட் உடன் வருகிறது
Photo Credit: Xiaomi
கிட்டத்தட்ட அனைத்து Xiaomi மற்றும் Redmi ஸ்மார்ட்போன்களும் 5,000mAh பேட்டரிகளைக் கொண்டுள்ளன
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Redmi K80 செல்போன் சீரியஸ் பற்றி தான்.
Redmi K80 செல்போன் சீரியஸ் இந்த வார இறுதியில் 120W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான சப்போர்ட் உடன் வருகிறது. இது 6,000mAh பேட்டரியுடன் இருக்கும் என கூறப்படுகிறது. அடுத்து இதைவிட பெரிய பேட்டரியுடன் மற்றொரு செல்போனை வெளியிட தயாராகி வருவதாகக் கூறுகிறது. வரவிருக்கும் இந்த Xiaomi ஸ்மார்ட்போனில் 90W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் 7,000mAh பேட்டரி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7,000mAh பேட்டரியுடன் கூடிய செல்போனை உருவாக்கும் முயற்சியில் Xiaomi இருப்பதாக சீனாவின் Weibo சமூக ஊடகத்தில் கூறப்பட்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜெனரல் 3 சிப்செட்டுக்கு அடுத்ததாக அறிவிக்கப்படாத எஸ்எம்8735 சிப்செட்டில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது ஸ்னாப்டிராகன் 8எஸ் எலைட் அல்லது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜெனரல் 4 ஆக இருக்கலாம் என தெரிகிறது.
வரவிருக்கும் மாடலில் 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் வசதியை Xiaomi சேர்க்கும் என கூறப்படுகிறது. இருப்பினும், 7,000mAh பேட்டரி கொண்ட முதல் போன் இதுவாக இருக்காது. ஏற்கனவே Samsung , Tecno , Itel மற்றும் Oukitel போன்ற பிராண்டுகளின் சில மாடல்கள் இன்னும் பெரிய பேட்டரிகளுடன் வெளியாகி இருக்கிறது.
இருப்பினும், பெரும்பாலான முக்கிய ஆண்ட்ராய்டு போன்களை விட இது வரவேற்கத்தக்க முன்னேற்றமாக இருக்கும். OnePlus, Realme மற்றும் Honor உள்ளிட்ட பல சீன பிராண்டுகள் தங்கள் செல்போன்களில் அதிக ஆற்றல் கொண்ட சிலிக்கான் அடிப்படையிலான பேட்டரிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
இருப்பினும், 7,000mAh பேட்டரி ஃபோனை அறிமுகப்படுத்துவது குறித்து Xiaomi நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus 13 ஆனது 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் iQOO 13 சீன மாடல் 6,150mAh செல்களைக் கொண்டுள்ளது. வரவிருக்கும் Realme Neo 7 7,000mAh பேட்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Realme GT 7 Pro செல்போனின் சீன மாடல் 6,500mAh பேட்டரியை கொண்டுள்ளது.
கிட்டத்தட்ட அனைத்து Xiaomi மற்றும் Redmi ஸ்மார்ட்போன்களும் 5,000mAh பேட்டரிகளைக் கொண்டுள்ளன. வரவிருக்கும் Redmi K80 தொடர் 120W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான சப்போர்ட் உடன் 6,000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Karam Is Now Streaming Online: Where to Watch Vineeth Sreenivasan's Malayali Action Thriller
Kamaro 2 Is Streaming Now on Sun NXT: Know All About the Horror Suspense Film
Saali Mohabbat OTT Release: Know When and Where to Watch the Radhika Apte-Starrer