பெரிய பேட்டரிகள் கொண்ட மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களில் Oppo கவனம் செலுத்தி வருகிறது
Photo Credit: Oppo
Oppo Find X8 Pro (வலது) கணிசமான அளவு 5,910mAh பேட்டரியைக் கொண்டுள்ளது
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Oppo நிறுவனத்தின் செல்போன்கள் பற்றி தான்.
பெரிய பேட்டரிகள் கொண்ட மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களில் Oppo கவனம் செலுத்தி வருகிறது. சிலிக்கான் கார்பன் பேட்டரிகளை கொண்டதாக அவை இருக்கலாம் என தெரிகிறது. 2024 ஆம் ஆண்டில் 6,000mAh பேட்டரிகள் கொண்ட செல்போன்களை வெளியிட்ட Oppo அடுத்து 7,000mAh பேட்டரிகள் கொண்ட செல்போனில் கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே 7,000mAh பேட்டரிகள் வரை பேக் செய்யக்கூடிய இரண்டு ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக கூறியுள்ளது. அடுத்த மாதம் விரைவில் 7,000mAh பேட்டரி கொண்ட செல்போனை Oppo அறிமுகப்படுத்தலாம் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
80W சார்ஜிங்கிற்கான சப்போர்ட் உடன் வருகிறது
சீன சமூக வலைதளமான வெய்போவில்பகிர்ந்த விவரங்களின்படி, அடுத்த உயர் செயல்திறன் கொண்ட புதிய செல்போன்களை பெரிய பேட்டரிகளுடன் வெளியிட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தயாரிப்பில் உள்ள மூன்று செல்போன்கள் பற்றிய தகவல் கசிந்துள்ளது. மூன்று மாடல்களும் அதன் தற்போதைய வரிசை மாடல்களை விட அதிக திறன் கொண்ட பேட்டரிகளுடன் வரும்.
பட்டியலிடப்பட்ட மூன்று ஸ்மார்ட்போன்களில் முதலாவது 6,285mAh பேட்டரி அல்லது வழக்கமான 6,400mAh பேட்டரியை கொண்டிருக்கும். அடுத்து 6,850mAh பேட்டரியுடன் இன்னொரு செல்போனும் தயாரிப்பில் உள்ளது. இது 7,000mAh மேல் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மற்றொரு செல்போன் தயாரிப்பு பணி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு மாடல்களும் 80W சார்ஜிங் சப்போர்ட் வழங்கும் என கூறப்படுகிறது.
டூயல் செல் 6,140mAh பேட்டரி கொண்ட மூன்றாவது ஸ்மார்ட்போனும் உருவாக்கத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது வழக்கமாக 6,300mAh பேட்டரியை கொண்டிருக்கும். இந்த மாடல் மற்ற இரண்டு செல்போன் மாடல்களை விட சிறியதாக இருந்தாலும், இது 100W சார்ஜிங் சப்போர்ட் உடன் வரலாம் என தெரிகிறது.
7,000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் டிசம்பரில் வெளியிடப்படலாம் என்று சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. Realme வரவிருக்கும் Realme Neo 7 கைபேசிக்கான வெளியீட்டுத் தேதியை டிசம்பர் 11 ஆம் தேதி நிர்ணயித்துள்ளது , மேலும் சமீபத்தில் வெளியான தகவல்படி MediaTek Dimensity 9300+ சிப் மற்றும் 7,000mAH பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கிறது.
பெரிய பேட்டரிகள் பொருத்தப்பட்ட ஸ்மார்ட்போன்கள் பற்றி Oppo நிறுவனத்தில் இருந்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது. வெளியிடப்படாத ஸ்மார்ட்போன்களின் விவரங்களைப் பகிர்வதில் டிப்ஸ்டர் என்கிற தளம் பெயர்போனது. அதில் வெளியான தகவல் படி பார்த்தால் வரும் மாதங்களில் Oppo நிறுவனத்தின் மூன்று செல்போன்களை பற்றி மேலும் அறியலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Microsoft Announces Latest Windows 11 Insider Preview Build With Ask Copilot in Taskbar, Shared Audio Feature
Samsung Galaxy S26 Series Specifications Leaked in Full; Major Camera Upgrades Tipped