Photo Credit: Xiaomi
Redmi Note 14 5G ஆனது Xiaomiயின் Android 14-அடிப்படையிலான HyperOS 1.0 இடைமுகத்தில் இயங்குகிறது.
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போது நாம் பார்க்க இருப்பது Redmi Note 14 5G செல்போன் சீரியஸ் பற்றி தான்.
Redmi Note 14 5G இப்போது இந்தியாவில் புதிய தோற்றத்தில் கிடைக்கிறது. இது 2024 டிசம்பரில் மூன்று வண்ண விருப்பங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. Mystique White, Phantom Purple மற்றும் Titan Black நிறத்தில் இதுவரை கிடைத்து வந்தது. இப்போது புதிதாக Ivy Green வண்ணத்தில் அறிமுகமாகி இருக்கிறது. 6.67-இன்ச் டிஸ்ப்ளே, MediaTek Dimensity 7025-Ultra SoC சிப்செட் மற்றும் மூன்று பின்புற கேமரா யூனிட் ஆகியவை இதில் அடங்கும். இது 45W சார்ஜிங் சப்போர்ட் உடன் 5,110mAh பேட்டரியைக் கொண்டுள்ள்ளது.IP64-மதிப்பிடப்பட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போன், 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மாடல் புதிய ஐவி கிரீன் வண்ண விருப்பத்தைப் பெற்றுள்ளது. இதன் விலை ரூ. 18,999 ஆகும். மேலும், 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி + 256ஜிபி மாடல்களின் விலை முறையே ரூ. 19,999 மற்றும் ரூ. 21,999 ஆகும். பயனர்கள் ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளில் ரூ. 1,000 உடனடி தள்ளுபடியைப் பெறலாம். அவர்கள் ஆறு மாதங்கள் வரை விலையில்லா EMI விருப்பங்களையும் பெறலாம்.
Redmi Note 14 5G-யின் சமீபத்திய வண்ண மாடல் Mi வலைத்தளம் வழியாக வாங்குவதற்கு கிடைக்கிறது. குறிப்பிட்டுள்ளபடி, புதிய மாடல் கடந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இந்தியாவில் ஏற்கனவே கிடைத்து வரும் Mystique White, Phantom Purple மற்றும் Titan Black வண்ண விருப்பங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளது.
Redmi Note 14 5G Ivy Green மாடல் மற்ற வண்ண வகைகளைப் போலவே அதே அம்சங்களுடன் வருகிறது. இது Xiaomi இன் Android 14 அடிப்படையிலான HyperOS 1.0 இடைமுகத்தில் இயங்குகிறது. 6.67-இன்ச் முழு-HD+ டிஸ்பிளே கொண்டுள்ளது. திரையில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளது. இது 8GB வரை RAM மற்றும் 256GB வரை உள் சேமிப்பகத்துடன் கூடிய ஹூட்டின் கீழ் MediaTek Dimensity 7025 Ultra SoC சிப்செட்டை கொண்டுள்ளது.
பின்புறத்தில், Redmi Note 14 5G ஆனது 50-மெகாபிக்சல் முதன்மை Sony LYT-600 சென்சார் கேமரா, 8-மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் மேக்ரோ சென்சார்கேமரா ஆகியவற்றைக் கொண்ட இரட்டை பின்புற கேமரா யூனிட் கொண்டுள்ளது. இது 20-மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. டால்பி அட்மாஸ் சப்போர்ட் உடன் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் இரண்டு மைக்ரோஃபோன்களைக் கொண்டுள்ளது
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்