30,000 ஆம்ப் பேட்டரி பேக்-அப்! எம்.ஐ. வெளியிட்டுள்ள மரண மாஸ் பவர் பேங்க்

30,000 ஆம்ப் பேட்டரி பேக்-அப்! எம்.ஐ. வெளியிட்டுள்ள மரண மாஸ் பவர் பேங்க்

7.5 மணி நேரத்தில் பவர் பேங்க் முழு சார்ஜ் அடைந்து விடும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹைலைட்ஸ்
 • 30000mAh Mi Power Bank 3 Quick Charge Edition is available in China
 • The new power bank has 18W fast charging support via USB Type-C port
 • 30000mAh Mi Power Bank 3 can be fully charged in 7.5 hours

30 ஆயிரம் ஆம்ப். பேட்டரி திறன் கொண்ட சூப்பரான பவர் பேங்க்கை வெளியிட்டுள்ளது எம்.ஐ. நிறுவனம். இந்த பவர் பேங்கில் ஒரே நேரத்தில் 3 டிவைஸ்களுக்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும்.

டைப் சி போர்ட்டின் மூலமாக 18 வாட்ஸ் என்ற அளவில், இந்த பவர் பேங்க் மிக வேகமாக சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது. ஏற்கனவே சொன்னதைப் போன்று இதிலிருந்து 3 டிவைஸ்களுக்கு சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும். அதிகபட்சமாக 24 வாட்ஸ் வேகத்தில் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம் என்பது இதன் குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும்.

மக்கள் மிக அதிகமாக ஸ்மார்ட்போனை உபயோகித்து வருவதால், அதில் அதிக பேட்டரி பேக் அப்களை, மொபைல் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. தவிர்க்க முடியாத காரணங்களால் ஸ்மார்ட் போன்களை ஒரு நாளைக்கு குறைந்த 2-3 முறையாவது முழுமையாக சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இதனால் பெரும்பாலானோர் பவர் பேங்க்குகளை பயன்படுத்தி வருகின்றனர். முன்பு 10 ஆயிரம் ஆம்ப். 20 ஆயிரம் ஆம்ப் பவர் பேக் அப்பில் பவர் பேங்குகள் வந்தன.

தற்போது அவற்றை மிஞ்சும் வகையில் 30 ஆயிரம் ஆம்ப். அளவில் எம்.ஐ. செம மாஸான பவர் பேங்க்கை வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ. 1,800 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை முழுமையாக சார்ஜ் ஏற்றிக் கொண்டால், 5 ஆயிரம் ஆம்ப் பேட்டரி திறன் கொண்ட மொபைலை, குறைந்தது 5 முறையாவது நாம் முழுமையாக சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும்.

தற்போது வரும் போன்கள் பெரும்பாலும் டைப் சி வகையை சேர்ந்த சார்ஜர்களை கொண்டுள்ளன. அவற்றுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் இந்த எம்.ஐ. பவர் பேங்க்கில் டைப் சி சார்ஜ் போர்ட் உள்ளது.

7.5 மணி நேரத்தில் பவர் பேங்க் முழு சார்ஜ் அடைந்து விடும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மொத்தம் 657.9 கிராம் எடையில் அதாவது, அரைக்கிலோவுக்கும் அதிகமான எடையில் இந்த பவர் பேங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி வெளியூர் செல்வோர், சார்ஜ் ஏற்றிக் கொள்வதில் சிரமங்களை சந்திப்பவர்களுக்கு இந்த பவர்வுல்லான பவர் பேங்க் உதவியாக அமையும்.


Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. வாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்!
 2. Realme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!
 3. பட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்!
 4. சாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!
 5. OnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்? முழு விவரங்கள்
 6. Moto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்!
 7. Google Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு!
 8. வந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!
 9. அடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்! எவ்வளவு ரூபாய் இருக்கும்?
 10. அமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்
© Copyright Red Pixels Ventures Limited 2021. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com