கடந்த 2017ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் தீபாவளி சமயத்தில் மட்டும் 300 சதவீத விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது
ஹூவாய் நிறுவனத்தின் ஆன்லைன்-சார்ந்த துணை-பிராண்டான ஹானர் நிறுவனமானது, தீபாவளி பண்டிகை காலங்களில் ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் ஹானர் ஸ்டோர் மூலம் 10 லட்சத்திற்கும் அதிகமான ஹானர் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2017ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் தீபாவளி சமயத்தில் மட்டும் 300 சதவீத விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
எங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்க, நாங்கள் மேற்கொண்ட உண்மையான முயற்சியே விற்பனையில் சாதனை படைத்துள்ளது. இதேபோல், எங்கள் எதிர்கால முயற்சிகளிலும் உங்களது எதிர்பார்ப்புகளைத் தாண்டிவிடக்கூடும் என்று நம்புகிறோம் என ஹூவாய் விற்பனை பிரிவு துணை தலைவர் சஜ்சீவ் தெரிவித்துள்ளார்.
ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் ஹானரின் நடுத்தர ரக போன்களான ஹானர் 9N மற்றும் ஹானர் 8 எக்ஸ் இரண்டுமே முன்னணி பெற்றுள்ளது.
மேலும், ப்ளிப்கார்ட்டில் மட்டும் ஸ்டாக் உள்ளவரை ஹானர் தனது ஸ்மார்ட்போன்களை தொடர் தள்ளுபடி விலைக்கு விற்பனை செய்து வருகிறது. ஹானர் 9N, 9 லைட், 7s, 9i, 7A, மற்றும் 10 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களும் தீபாவளி சமயத்தில் சிறப்பு விலையில் இடம்பெற்றது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Realme Neo 8 Display Details Teased; TENAA Listing Reveals Key Specifications