இந்த லேப்டாப்பில் உலகின் மிக அபாயகரமான 6 வைரஸ்கள் உள்ளன.
Photo Credit: Deep Instinct
6 வைரஸ்கள் கொண்ட உலகின் அபாயகரமான லேப்டாப்!
ஒரு லேப்டாப், ஒரு சாதாரன லேப்டாப், வெறுமென விண்டோஸ் XP அமைப்பில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு லேப்டாப், 8.35 கோடிக்கு ஏலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப், ஏன் மிக அபாயகரமானது, இவ்வளவு மதிப்பபிற்கு காரணம் என்ன. யாரேனும் பிரபலங்கள் பயன்படுத்திய லேப்டாப்பா, அல்லது வரலாற்றுத் தலைவர்கள் கைகல் பட்ட லேப்டாப்பா, இல்லை. பின் ஏன் இந்த லேப்டாப்பிற்கு இவ்வளவு மதிப்பு. வெறும் 10.5 இன்ச் அளவிலான திரை மட்டுமே கொண்டு, விண்டோஸ் XP அமைப்பில் செயல்படும் இந்த லேப்டாப்பில் உலகின் மிக அபாயகரமான 6 வைரஸ்கள் உள்ளன. இந்த ஆறு வைரஸ்கள், இதுவரை 7 லட்சம் கோடி வரையிலான சேதத்தை உலகில் ஏற்படுத்தியுள்ளது. வெறுமென ஒரு சாதாரன லேப்டாப், உயர்தரமான தொழில்நுட்பம் கூட இல்லாத லேப்டாப், இவ்வாறான சேதத்தை ஏற்படுத்த முடியுமா. கலை என்பது மிகவும் சிக்கலானது, அதே நேரம் சுவாரசியமானதும் கூட. கலை பல வடிவங்களில், பல துறைகளில் பயணித்துக்கொண்டு இருக்கிறது. அதில், நீங்கள் இதுவரை கேட்டிராத ஒரு வடிவம் தான் இந்த லேப்டாப்!
கலைப்படைப்புகளில் ஒன்று என கருதப்படும் 'குழப்பங்களில் நிலைத்தன்மை' ('The Persistence of Chaos') என பெயர் பெற்றிருக்கும் இந்த லேப்டாப், 2008-ஆம் ஆண்டு சாம்சங் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் NC10 லேப்டாப். வெறும் 10.2 இன்ச் திரை, 14GB மெமரி விண்டோஸ் XP அமைப்பில் செயல்படக்கூடிய இந்த லேப்டாப்பில் 6 அபாயகரமான வைரஸ்கள் உட்புகுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனை உருவாக்கியவர், க்யோ ஓ டாங்(Guo O Dong). சைபர் செக்யூரிட்டி துறையில் ஆழமான உள்ளுணர்வு கொண்ட இவரை ஒரு மிகப்பெரிய கலைஞர் என்று தான் அழைக்க வேண்டும். உலகத்தில் 7 லட்சம் கோடி வரையிலான சேதங்களை ஏற்படுத்திய ஒன்றை உருவாக்கிய கலைஞர்.
இந்த லேப்டாப்பில் உள்ள வைரஸ் பரவி விடக்கூடாது என்பதற்காக, ஒரு அறையில் தனித்து வைக்கப்படுள்ள இந்த லேப்டாப், மேலும் வைரஸை பரப்பி எந்த சேதத்தையும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக இந்த முயற்சி. இதை தாண்டி, அந்த லேப்டாப்புடன் யாரேனும் தொடர்பை ஏற்படுத்தினால், அவர்கள் சந்திக்கும் விளைவு மிகவும் கொடியதாக இருக்கும்.
இப்படி தனித்து வைக்கப்பட்டுள்ள, இந்த ஆபத்தான லேப்டாப், ஏற்கனவே தனி ஏலத்தில் விடப்பட்டு 8.35 கோடியை ஏலத்தில் தொட்டுள்ளது. இந்த ஏலம் மேலும் இணையதளத்தில் தொடரப்பட்டுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் முடிவடையவுள்ள இந்த ஏலம், The Persistence of Chaos என பெயரிட்டு துவங்கப்பட்டுள்ள ஒரு தளத்தில் நடக்கிறது. யார் வேண்டுமேனாலும் பங்கேற்கலாம் என்னும் இந்த ஏலத்தின் குறைந்தபட்ச ஏலத்தொகை 8.35 கோடி.
ஐ லவ் யூ (ILOVEYOU), மை டூம் (MyDoom), சோ பிக் (SoBig), வான்ன கிரை (WannaCry), டார்க் டக்கீலா (Dark Tequila), ப்ளாக் எனர்ஜி (BlackEnergy), இவை தான் அந்த ஆறு வைரஸ்கள். மிகவும் அழகான பெயர்களை கொண்ட இந்த ஆறு வைரஸ்களின் தாக்கம் என்பது அழகானதாக இருக்கவில்லை.
ஐ லவ் யூ (ILOVEYOU) 38 ஆயிரம் கோடி, மை டூம் (MyDoom) 2.64 லட்சம் கோடி, சோ பிக் (SoBig) 2.57 லட்சம் கோடி, வான்ன கிரை (WannaCry) 28 ஆயிரம் கோடி என இந்த வைரஸ்கள் ஏற்படுத்திய சேதம், பல ஆயிரம் கோடிகளில் இருந்து, லட்சம் கோடி வரை நீள்கிறது.
தொழில்நுட்ப உலகை கடந்து இதில் சில வைரஸ்கள் மக்களை நேரடியாக தாக்கியுள்ளது. வான்ன கிரை (WannaCry) வைரஸ், பிரிட்டனின் தேசிய சுகாதாரத்துறையை ஒரு சுழற்று சுழற்றி 700 கோடிவரை சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வைரஸ் 2 லட்சம் பேரை நேரடியாக தாக்கியுள்ளது.
இவ்வளவு கோடி சேதங்களை ஏற்படுத்திய இந்த லேப்டாப், இப்போது சொற்பமான கோடிகளிலேயே விலை பெற்றிருக்கிறது. இன்னும் சில மணி நேரங்களில் ஏலம் முடிவடைகிறது. பார்ப்போம், கோடிக்கணக்கில் சேதத்தை ஏற்படுத்திய லேப்டாப் எவ்வளவு கோடி என்று!
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Ghost of Yotei Is Getting New Game Plus Mode in a Free Patch This Month
Vivo X200T Tipped to Launch Soon; Said to Be Similar to Vivo X200 FE With Few Hardware Changes