இன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற 'ரெட்மீ K20' போன்களின் அறிமுக நிகழ்வில், அறிமுகமாகியுள்ள லேப்டாப் தான் 'ரெட்மீபுக் 14'. சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த லேப்டாப் தான் ரெட்மீயின் முதல் லேப்டாப். 14-இன்ச் அளவிலான திரையை கொண்ட இந்த லேப்டாப்பில் எட்டாவது தலைமுறை i7 ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஜீஃபோர்ஸ் MX250 கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த லேப்டாப். ரெட்மீ ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகமான இந்த 'ரெட்மீபுக் 14' லேப்டாப்பின் முன்பதிவு, சீனாவில் ஜூன் 1-ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்த லேப்டாப் ஜூன் 11-ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. சீனாவில் மட்டுமே அறிமுகமாகி விற்பனையாகவுள்ள இந்த லேப்டாப், மற்ற இடங்களில் எப்போது வெளியாகும் என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
மொத்தம் மூன்று வகைகளில் வெளியாகியுள்ள இந்த லேப்டாப்பின் அடிப்படை வகையின் விலை 3,999 யுவான்கள் (40,300 ரூபாய்). இந்த லேப்டாப் இன்டெல் கோர் i5 ப்ராசஸரும், 256GB சேமிப்பு அளவையும் கொண்டுள்ளது. இன்டெல் கோர் i5 ப்ராசஸருடன் 512GB சேமிப்பு அளவு கொண்ட மற்றொரு வகை லேப்டாப் 4,299 யுவான்கள் (43,300 ரூபாய்) என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. எட்டாவது தலைமுறை i7 ப்ராசஸர், 512GB சேமிப்பு அளவு கொண்ட இதன் டாப்-என்ட் வகை 4,999 யுவான்கள் (50,400 ரூபாய்) என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த 'ரெட்மீபுக் 14' லேப்டாப்பின் முன்பதிவு, சீனாவில் ஜூன் 1-ஆம் தேதி மதியம் 1 மணிக்கு துவங்கவுள்ளது. இந்த லேப்டாப் ஜூன் 11-ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.
14-இன்ச் திரை கொண்ட இந்த லேப்டாப், எட்டாவது தலைமுறை i7 ப்ராசஸர், 512GB சேமிப்பு அளவு கொண்டுள்ளது. மேலும், இந்த லேப்டாப்பில் ஜீஃபோர்ஸ் MX250 கிராபிக்ஸ் கார்டு (Nvidia GeForce MX250 graphics) பொருத்தப்பட்டுள்ளது.
ஒரு முறை முழுவதுமாக ரீ-சார்ஜ் செய்தால், 10 மணி நேரம் வரை நீடிக்கும் பேட்டரி லைப் கொண்டுள்ளது. 17.95mm அடர்த்தி கொண்ட இந்த லேப்டாப் 1.5 கிலோ எடை கொண்டுள்ளது.
விண்டோஸ் 10 அமைப்பு கொண்டுள்ள இந்த 'ரெட்மீபுக் 14' லேப்டாப்பில், ஸ்மார்ட் அன்லாக் 2.0 வசதியை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்