Photo Credit: Weibo
பிரபல சீன போன்கள் தயாரிப்பு நிறுவனமான சியோமி தனது அடுத்தக்கட்ட தயாரிப்பான எம்ஐ நோட்புக் ஏர் மடிக்கணினியை நாளை சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய நோட்புக் தயாரிப்பு வெறும் 1.07 கிலோ உடையது என வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் 1.25 கிலோ எடையுள்ள நிலையில் சியோமியின் இந்த தயாரிப்பே 1.07 கிலோதான் எடை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. மேலும் இந்த நேட்புக் ஏர் 8வது தலைமுறை இன்டெல் கோர் பிராசஸரை கொண்டுள்ளதாகவும் மேம்படுத்தப்பட்ட ஜிபியூ, ரேம் மற்றும் சேமிப்பு வசதிகளை கொண்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
சியோமி இதற்கு முன்னர் இதுபோன்ற நோட்புக் தயாரிப்புகளை இந்தியாவில் வெளியாடாத நிலையில், நோட்புக் ஏர் மூலம் மடிக்கணினிகள் பிரிவிலும் கால் பதிக்க உள்ளது.
இந்தியாவில் தனது தயாரிப்பில் தொலைக்காட்சிகள், கேமராக்கள், வீட்டிற்கான பாதுகாப்புத் தயாரிப்புகள் என அனைத்தையும் சந்தையில் அறிமுகம் செய்து வரும் சியோமி. நோட்புக் ஏர் பற்றிய மேலும் தகவல்கள் நாளை வெளியிடப்படும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்