அனைத்து விதமான பொருட்கள் மீதும் மனநிறைவான சலுகைகளை வழங்கி வருகிறது
இரண்டறை நாட்களில் 2 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து உள்ளதாக சியோமி தரப்பில் கூறப்படுகிறது.
ஆன்லைன் வர்த்தக தளங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தங்களுடைய வருடாந்திர விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அனைத்து விதமான பொருட்கள் மீதும் மனநிறைவான சலுகைகளை வழங்கி வருகிறது. பிளிப்கார்ட்டின் ’பிக் பில்லியன் டேஸ்’ மற்றும் அமேசானின் ‘கிரேட் இண்டியன் சேல்’ இரண்டிலும் தள்ளுபடி விற்பனை பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதில், பல நிறுவனங்களின் தயாரிப்புகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் அதில் முன்னணியில் இருப்பது சியோமி. சீனா தயாரிப்பு நிறுவனமான சியோமி இந்த விழாக்கால சலுகையில், இரண்டறை நாட்களில் 2.5 மில்லியன் மின்சாதனப் பொருட்களை விற்பனை செய்துள்ளதாக கூறுகிறது.
சியோமியின் தயாரிப்புகளான, எம்.ஐ எல்.இ.டி டிவிகள், எம்.ஐ பேண்ட்3, எம்.ஐ பவர் பேங்க்ஸ், எம்.ஐ இயர் போன்ஸ், எம்.ஐ ரூட்டர்ஸ் மற்றும் மேலும் பல பொருட்கள் பிளிப்கார்ட், அமேசான் சேல் இதுதவிர, எம்.ஐ.காம் சூப்பர் சேலிலும் விற்பனையாகிறது.
இதுகுறித்து சியோமி தரப்பு கூறுகையில், அக்டோபர் 9ஆம் தேதி மதியம் 12 மணியிலிருந்து அக்.11ஆம் தேதி மாலை 7 மணிக்கும் இடைபட்ட நேரத்தில் தங்கள் நிறுவனம் விற்பனையில் சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
விழாக்கால சலுகையின் தொடக்க நாட்களான கடந்த மாதம் செப். 20 மற்றும் 22ல் ஒரு மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. மேலும், 100,000 எம்.ஐ எல்.இ.டி டிவி மற்றும் 400.000 எம்.ஐ எக்கோ சிஸ்டங்கள் விற்பனையாகி உள்ளது.
சியோமி இந்தியாவின் தலைமை நிர்வாகி பேசுகையில், ஒவ்வொரு வருடமும் விழாக்காலத்தின் போது விற்பனையில் மிகப்பெரிய வெற்றியை பார்த்து வருகிறோம். அதில் இந்த வருடம் இரண்டறை நாட்களில் 2.5 பொருட்களை விற்று சாதனை படைத்துள்ளோம். எம்.ஐ நிறுவன பொருட்களுக்கு இந்தியா முழுவதும் கிடைத்துள்ள பேராதரவை எண்ணி மகிழ்ச்சியடைகிறோம். வாடிக்கையாளர்கள் விழா காலத்தின் போது, எங்கள் நிறுவன தயாரிப்புகளை தங்களின் விரும்பமானவர்களுக்கு வாங்கி பரிசளிப்பது எங்களுக்கு மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
விழாக்கால சலுகையில் எம்.ஐ-யின் ஸ்மார்ட்போன்களான எம்.ஐ மிக்ஸ் 2, ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி 6 ப்ரோ, ரெட்மி ஒய்2, எம்.ஐ ஏ2 மற்றும் எம்.ஐ எல்.இ.டி ஸ்மார்ட் டிவி 4ஏ, எம்.ஐ எல்.இ.டி டிவி 4சி ப்ரோ, எம்.ஐ டிவி 4ஏ ப்ரோ, 10000mah எம்.ஐ பவர் பேங்க் 2ஐ, எம்.ஐ பேண்ட் எச்.ஆர்.எக்ஸ் எடிஷன் அடங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Ghost of Yotei Is Getting New Game Plus Mode in a Free Patch This Month
Vivo X200T Tipped to Launch Soon; Said to Be Similar to Vivo X200 FE With Few Hardware Changes