இந்தியாவில் ஆன்லைனில் திரைப்படங்கள், சீரியல் பார்க்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Photo Credit: Counterpoint Technology
ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங்கில் ஹாட்ஸ்டார் தான் அதிகம் பார்க்கப்படும் தளமாக உள்ளது.
இந்தியாவில் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமைங்கை பார்ப்பவர்களில் 89 சதவீதம்பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகர்த்து வருகிறது.
இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி வீடியோ ஸ்ட்ரீமிங்கை பார்ப்பவர்களில் பாதிப்பேர், 5 மெட்ரோ நகரங்களில்தான் உள்ளனர். இதன் மூலம் கிராமப்புறங்களில் வீடியோ ஸ்ட்ரீமிங் இன்னும் வரவேற்பை பெறவில்லை என்று கருதிக் கொள்ளலாம்.
ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனங்களில் அதிகம் பார்க்கப்படும் தளமாக ஹாட் ஸ்டார் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக அமேசான் ப்ரைம் வீடியோ, சோனிலைவ், நெட்ஃப்ளிக்ஸ் ஆகியவை உள்ளன. இந்த தரவரிசை என்பது இந்தியாவுக்கு மட்டுமே பொருந்தும்.
இதேபோன்று ஊட், ஜீ5, ஆல்ட் பாலாஜி, ஈரோஸ் நவ் ஆகிய தளங்கள் முறையே 5 முதல் 8 இடங்கள் வரை உள்ளன. ஆன்லைன் ஸ்ட்ரீமிங் வர்த்தகத்தை பொறுத்தளவில் விளம்பரங்கள் மூலமே அதிக வருவாய் கிடைக்கிறது. தற்போது சப்ஸ்க்ரிப்ஷன் முறையில் வருவாய் கணிசமாக உயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கு குறிப்பிடப்பட்ட தளங்களில் அமேசான் ப்ரைம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸை தவிர்த்து மற்ற தளங்களில் சிலவற்றை நாம் இலவசமாக பார்க்க முடியும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
CES 2026: Asus ProArt PZ14 With Snapdragon X2 Elite SoC Launched Alongside Zenbook Duo and Zenbook A16