கூகுள் நிறுவனம் தனது அறிமுகமான குரலை வைத்து போனை ஆன்-லாக் செய்யும் வசதியை உடனடியாக நீக்க முடிவு செய்துள்ளது. மேலும் போன்களில் உள்ள 'ஓகே கூகுள்' வசதியையும் கூகுள் நிறுவனம் நீக்குகிறது.
ஏற்கெனவே மோட்டோ Z மற்றும் பிக்சல் XL ஆகிய போன்களில் இந்த குரலை வைத்து போனை ஆன்லாக் செய்யும் முறை இடம்பெற்ற நிலையில், தற்போது வெளியான கூகுள் 9.27 ஆப்டேட் மூலம் தனது செயல்பாட்டை இழந்துள்ளது.
இந்த புதிய அப்டேட் மூலம் கூகுள் கேலண்டர், ஜி மெயில் மற்றும் சில ஆப்களை தவிற 'ஓகே கூகுள்' வசதி செயல்படாது. விரைவில் வெளியாகவுள்ள கூகுள் தயாரிப்பான பிக்சல் 3XL போனில் இந்த குரலை வைத்து போனை அன்லாக் செய்யும் வசதி நீக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இந்த அதிரடி மூடிவின் மூலம் குரல் மாறாட்டம் செய்து யாரும் போன்களை உபயோகிக்க முடியாது என கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்