அடுத்த அதிரடிக்கு தயாரானது ஃப்ளிப்கார்ட்; ‘பிக் ஷாப்பிங் டேஸ்’ பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
அடுத்த அதிரடிக்கு தயாரானது ஃப்ளிப்கார்ட்; ‘பிக் ஷாப்பிங் டேஸ்’ பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

சமீபத்தில் நிறைவடைந்த ஃப்ளிப்கார்ட் சம்மர் சேலில், ரியல்மி 2 ப்ரோ, ஐபோன் XR, நோக்கியா 6.1 ப்ளஸ் போன்களுக்கு அதிரடி தள்ளுபடி கொடுக்கப்பட்டது. 

ஹைலைட்ஸ்
 • மே 15 ஆம் தேதி 'பிக் ஷாப்பிங் டேஸ்' ஆரம்பமாகும்
 • மே 19 ஆம் தேதி, இந்த தள்ளுபடி சேல் முடிவடையும்
 • சேல் தள்ளுபடிகள் குறித்து நாளை முழு விபரம் தெரியும்

ஃப்ளிப்கார்ட் நிறுவனம், தனது சம்மர் சேலை முடித்து இன்னும் ஒரு சில நாட்கள் கூட ஆகாக நிலையில், அடுத்த அதிரடி விற்பனை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ‘பிக் ஷாப்பிங் டேஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விற்பனை வரும் மே 15 ஆம் தேதி ஆரம்பிக்கிறது. மே 19 ஆம் தேதி வரை நடகுகம் இந்த தள்ளுபடி விற்பனையின் போது ஸ்மார்ட் போன்ஸ், மின்னணு பொருட்கள், மடிக்கணினிகள், பிற கேட்ஜெட்ஸ்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்படும் என்று எதிரிபார்க்கப்படுகிறது. இதைத் தவிர, வீடு மற்றும் சமையல் உபயோகப் பொருட்கள், ஃபேஷன் பொருட்கள், கார்மென்ட்ஸ் உள்ளிட்டவைகளுக்கு ஆஃபர் கொடுக்கப்படும் என்று நம்பலாம். சமீபத்தில் நிறைவடைந்த ஃப்ளிப்கார்ட் சம்மர் சேலில், ரியல்மி 2 ப்ரோ, ஐபோன் XR, நோக்கியா 6.1 ப்ளஸ் போன்களுக்கு அதிரடி தள்ளுபடி கொடுக்கப்பட்டது. 

இந்த ‘பிக் ஷாப்பிங் டேஸ்' விற்பனைக்கு எச்.டி.எப்.சி வங்கியுடன் கை கோர்த்துள்ளது ஃப்ளிப்கார்ட். எச்.டி.எப்.சி வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி பொருட்கள் வாங்குவோர்க்கும் கேஷ்-பேக் ஆஃபர் கொடுக்கப்பட உள்ளது. இந்த சேலில், எந்தெந்த பொருட்களுக்கு என்ன ஆஃபர் கொடுக்கப்படும் என்பது குறித்து ஃப்ளிப்கார்ட் இன்னும் அறிவிக்கவில்லை. இது குறித்த விபரம் நாளை தெரிவிக்கப்படும். 

ஃப்ளிப்கார்ட், சம்மர் சேலின் போது, ஐபோன் XR, நோக்கியா 6.1 ப்ளஸ், நோக்கியா 5.1 ப்ளஸ், ரியல்மி 2 ப்ரோ, ஹானர் 9 லைட், ஹானர் 10 உள்ளிட்ட போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கியது. குறிப்பாக,  ஐபோன் XR, 59,900 ரூபாய்க்கு விற்கப்பட்டது. எச்.டி.எப்.சி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி போனை வாங்கியோர்க்கு, உடனடி 5,990 ரூபாய் கேஷ்-பேக் கொடுக்கப்பட்டது. பழைய போனை கொடுத்து மேலும் 17,450 தள்ளுபடியையும் இந்த சேல் மூலம் பெற முடிந்தது. 

இதைத் தவிர, கூகுள் ஸ்மார்ட் ஹோம் ஸ்பீக்கர்களுக்கும் சம்மர் சேலின் போது தள்ளுபடி கொடுக்கப்பட்டது. அமேசான் நிறுவனமும், ஃப்ளிப்கார்டை போலவே சம்மர் சேலில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் சம்மர் சேலில் ஆஃபருக்கு கிடைத்த அனைத்துப் பொருட்களும், மற்றொரு முறை அதே விலையில் ஃப்ளிப்கார்ட், பட்டியலிட வாய்ப்புள்ளது. 


 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. வாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்!
 2. Realme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!
 3. பட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்!
 4. சாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!
 5. OnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்? முழு விவரங்கள்
 6. Moto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்!
 7. Google Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு!
 8. வந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!
 9. அடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்! எவ்வளவு ரூபாய் இருக்கும்?
 10. அமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com