ரிலையன்ஸ் சில்லறை விற்பனையின் இ-காமர்ஸ் நிறுவனமான ஜியோமார்ட் மூலம் Amazon மற்றும் Flipkart உடன் போட்டியிட WhatsApp தயாராக உள்ளது. புதன்கிழமை, பேஸ்புக் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) இடையேயான கூட்டணியின் போது இது தெரியவந்துள்ளது. ரூ.43,574 கோடி மதிப்புள்ள ஜியோ பிளாட்ஃபார்ம் லிமிடெட் நிறுவனத்தில் பேஸ்புக் 9.99 சதவீத பங்குகளை வாங்கியதாக ரிலையன்ஸ் அறிவித்துள்ளது. இந்த கூட்டணியின் அடிப்படையில், ஆர்ஐஎல்-ன் ஜியோ இயங்குதளத்தின் மூலம் இந்தியாவில் பேஸ்புக் விரிவடையும்.
இந்நிறுவனத்தைப் பொறுத்தவரை, 480 மில்லியனுக்கும் அதிகமான இணைக்கப்பட்ட பயனர்களுடன் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உலகின் இரண்டாவது பெரிய இணைய சந்தையாகும். மகாராஷ்டிராவின் நவி மும்பை, தானே மற்றும் கல்யாண் பகுதிகளில் பைலட் சோதனையின் அடிப்படையில் இந்த ஆண்டு ஜனவரியில் ரிலையன்ஸ் சில்லறை விற்பனை, ஜியோமார்ட்டை அறிமுகப்படுத்தியது.
ஜியோமார்ட் இயங்குதளம் ஏற்கனவே அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டுடன் போட்டியிடத் தயாராகிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிறுவனம் இந்திய நுகர்வோருக்காக பல சிறு வணிகர்கள் மற்றும் மளிகைக் கடைகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், அதன் நடவடிக்கைகள் நாட்டில் இன்னும் தொடங்கப்படவில்லை.
ரிலையன்ஸ் ஜியோ இயங்குதளம், ரிலையன்ஸ் சில்லறை மற்றும் வாட்ஸ்அப் இடையேயான புதிய கூட்டாண்மை காரணமாக, வாடிக்கையாளர்கள் விரைவில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி ஜியோமார்ட்டில் பரிவர்த்தனை செய்ய முடியும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.
அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டுடன் போட்டியிட ஜியோமார்ட்டை தள்ள ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது. மறுபுறம், வாட்ஸ்அப், இந்தியா உள்ளிட்ட வேறு சில சந்தைகளில் சிறு வணிகங்களுக்கான முக்கிய தளங்களில் மாற்றங்களைச் செய்துள்ளது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) தகவல்தொடர்புகளை எளிதாக்குவதற்காக பேஸ்புக்கிற்கு சொந்தமான நிறுவனம் 2018 ஜனவரியில் பிரத்யேக WhatsApp Business app-ஐ அறிமுகப்படுத்தியது. இது தவிர, WhatsApp Pay-வும் வெளியிடப்பட்டது. இது கட்டணத்தை எளிதாக்கும். இருப்பினும், இந்த அம்சம் தற்போது சோதனை முறையில் உள்ளது.
இந்த அம்சத்தின் காரணமாக, பயனர்கள் செயலியிலேயே டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்யலாம். வாட்ஸ்அப்பில் ஏற்கனவே 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் நாட்டில் உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வாட்ஸ்அப் பல பயனர்களைக் கொண்டிருந்த பிறகும் சம்பாதிப்பதற்கான உள்ளூர் வழிமுறைகள் இல்லை என்றாலும், இப்போது ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனத்தின் உதவியுடன், உடனடி செய்தியிடல் செயலி பேஸ்புக்கிற்கு பணம் சம்பாதிப்பதற்கான முக்கிய வழிமுறையாக வெளிவரத் தயாராக உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்