பல மணிநேரம் செயல் இழந்த இன்ஸ்டாகிராம் தளம், தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளது. தனது கிளை நிறுவனமான இன்ஸ்டாகிராம் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரும் ஃபேஸ்புக் ஆப் செயல்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் இப்படி செயல் இழந்திருக்கும் சமூக வலைதளத்தால் உலகம் முழுக்க இருக்கும் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் மற்றும் ஃபேஸ்புக் பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாங்கள் மீண்டும் வந்துவிட்டதாக ட்விட்டரில் ஒரு மீம்மை இன்ஸ்டாகிராம் நிறுவனம் ஷேர் செய்த நிலையில் இன்னும் ஃபேஸ்புக் சார்பில் அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
மேலும் வெளியான தகவல்படி அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவின் சில நாடுகளில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிகிறது. அதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் பயனர்கள் மற்றும் ஃபேஸ்புக் மூலமாக தொழில் செய்பவர்கள் தங்களது கோபத்தை #ஃபேஸ்புக்டவுன்(#facebookdown) என்ற ஹேஷ்டாக் மூலம் டிவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.
'நான் தினமும் விரும்பி படிக்கும் மீம்ஸ்களை என்னால் படிக்க முடியவில்லை. இதனால் நான் கடும் கோபத்தில் உள்ளேன்' #ஃபேஸ்புக்டவுன்(#facebookdown) என மரியா மெசினா டிவிட்டரில் பதிவு செய்திருந்தார்.
தி மெலினோ பார்க் என்னும் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனம் தனது மிகப்பெறிய வருமானமே ஃபேஸ்புக் மூலம் கிடைக்கும் விளம்பரங்கள்தான் என்றும் தற்போது நஷ்டமான வருமானத்தைத் திருப்பி கொடுப்பார்கள் என நம்புவதாக தெரிவித்துள்ளார். 12 மணி நேரத்துக்கு மேல் தொடரும் இந்தப் பிரச்னையை உடனடியாக சரிசெய்ய பல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்