இந்தியாவில் வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்க்கும் மிகச்சிறந்த 25 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பெயர்களை சமூக வலைதளமான லிங்கெடின் வெளியிட்டுள்ளது.
தொடங்கி 5 ஆண்டுகளேயான ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் ஓயோ, உடல் நல நிறுவனமான க்யூர் ஃபிட், டெலிவரி சர்வீஸ் செய்யும் டுன்ஸோ உள்ளிட்டவை முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மிகச் சிறந்த இடம் பெங்களூரு என்பது லிங்கெடின் பட்டியலில் இருந்து தெரிய வந்துள்ளது. தலை சிறந்த 25 நிறுவனங்களில் 11 நிறுவனங்களின் தலைநகரம் பெங்களூருவில் அமைந்துள்ளது. மற்றவை டெல்லி, மும்பையில் 7 நிறுவனங்கள், குர்கானில் 3 நிறுவனங்கள், டெல்லி மற்றும் புனேவில் தலா 2 இடங்கள் ஆகியவை அமைந்துள்ளன.
இவ்வாறான பட்டியலை லிங்கெடின் வெளியிடுவது இதுவே முதல்முறையாகும். இதில் முதல் இடம் பிடித்துள்ள ஓயோ நிறுவனம் குர்கானை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்தியாவில் மிகப்பெரும் ஓட்டல் நெட்வொர்க் என்ற பெயர் இதற்கு உண்டு. 230 நகரங்களில் மொத்தம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான அறைகளை ஓயோ கொண்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மேர்ரியாட்ஸ் 23,000, தாஜ் ஹோட்டல்ஸ் 17,000 அறைகளை கொண்டுள்ளன.
2-வது இடத்தில் இருப்பது பெங்களூரை தலைமையாக கொண்டு செயல்படும் க்யூர்ஃபிட் என்கிற உடல் நலம் தொடர்பான நிறுவனம். ஜிம் உபகரணங்கள் இல்லாத உடல் பயிற்சி, யோகா, ஆரோக்ய உணவு, தியான மையங்கள், முதலுதவி உள்ளிட்ட பிரிவுகளில் க்யூர்ஃபிட் முன்னணியில் உள்ளது.
மூன்றாவது இடத்தில் உள்ள டுன்ஸோவின் தலைமையிடமும் பெங்களூருதான். இது கூகுள் நிறுவனத்தின் நேரடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் ரிவிகோ, டிஜிட் இன்சூரன்ஸ், லிட்டில் ப்ளாக் புக், ரிபப்ளிக் வேர்ல்டு, தி மினிமலிஸ்ட், ரேஸர்பே, இன்னோவ்8 கவர்கிங், அக்கோ ஜெனரல் இன்சூரன்ஸ், ட்ரீபோ ஹோட்டல்ஸ், இன்க்ரெட், ஜம்போடெய்ல், உடான்.காம்., அப்க்ரேட்.காம்., இன்டர்வியூபிட், ஷட்ல் மற்றும் மீஷோ ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்