அமேசான் எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர், ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட உரையாடல்களை அனுமதி இன்றி வெளியே கசியவிட்டுள்ளது. இது குறித்து அமேசான் தரப்பில் கூறப்படுவது, "ஸ்பீக்கர் உபயோகிக்கும் போது குரல் பதிவு செய்யப்பட்டு, அதனை குறுஞ்செய்தியாக அனுமதியின்றி வெளிட்ட சம்பவம் எதிர்பார்க்காத ஒரு செயல்" என்று கூறியது. இது போன்ற ஆபத்துகள் ஏற்படுவதை முழுமையாக தவிர்க்க முடியாமல் இருந்தாலும், அதனை கட்டுப்படுத்த சில முன்னெச்சரிக்கை முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் கட்டுக்குள் வைக்கலாம்.
மைக்ரோ போனை கவனி
பெரும்பாலான ஸ்மார்ட் ஸ்பீக்கர்களில் மைக்ரோபோனை அணைத்து வைக்க பட்டன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை அணைத்து வைத்தால் நமது உரையாடல் பதிவாகாமல் இருக்கும். தேவையான போது, எக்கோ செயலியை ஆன் செய்து கொள்ளலாம். குரல் பதிவு செய்யும் போது, எக்கோ செயலி சிவப்பு நிறத்திற்கு மாறிவிடும்.
ஒலிவாங்கியைக் (மைக்) கட்டுப்படுத்து
ஸ்மார்ட் போன்களில், மைக்கின் செயல்பாட்டை தேவையற்ற போது நிறுத்தி வைக்க இயலாது. ஆனால், மைக் உபயோகம் தேவைப்படாத செயலிகள் மைக் உபயோகிப்பதைத் தவிர்க்கலாம். உதாரணமாக வாய்ஸ் ரெக்கார் செய்ய மைக் தேவை. ஆனால் நெட்ஃப்லிக்ஸ் போன்ற செயலிகள், குரல் பதிவை உபயோகிக்காது, நாம் தேடும் நிகழ்ச்சிகளை டைப் செய்வதன் மூலமே கிடைக்கப் பெறலாம். எனவே எந்த செயலிகளுக்கு மைக் தேவையோ அதற்கு மட்டும், மைக் உபயோக்கிக்க அனுமதி கொடுக்கலாம்.
கேமராவைக் கண்காணியுங்கள்
நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், தனது மடிக்கணினியில் தகவல்கள் கசியாது இருக்கவும், உளவு பார்த்து விடாமல் இருக்கவும் மடிக்கணினி கேமராவை மறைத்து வைத்திருப்பார். துணிக்கட்டு மூலம் நீங்களும் இந்த முறையை பயன்படுத்தலாம், வீட்டு பாதுகாப்பு கேமராக்கள் பயன்பத்தினால், வீட்டில் இருக்கும் போது அதனை சுவர் பார்த்தபடி திருப்பி வைத்துவிடுலாம். மறுபடியும் நீங்கள் வெளியே செல்லும் போது, கேமராவை சரியான பார்வையில் வைக்க மறக்காதீர்கள்.
சிக்னலை முடக்கு
ஸ்மார்ட் போன்கள் மற்றும் பிற கேஜெட்டுகள் உபயோகிக்கும் போது, 'ஃபாரடே பேக்' எனப்படும் மின்காந்த அலைகளை முடக்கும் சாதனத்தை பயன்படுத்தலாம். இதன் மூலம், தேவையற்ற பாதுகாப்பில்லாத உளவுகளில் இருந்து விடுபடலாம். மேலும், இருப்பிடம், மற்ற விவரங்களை வெளியே கசியாது பாதுகாத்து கொள்ள உதவும்.
கேட்ஜெட் பற்றிய புரிதல் அவசியம்
பல ஆண்டுகளாக ஆப்பிள், சாம்ஸங் போன்ற நிறுவனங்கள் எளிய முறையில் உயர் செயல் திறன் கொண்ட பொருட்களை தயாரிப்பதில் வழக்கம் காட்டி வருகின்றனர். ஆனால், வாடிக்கையாளர்கள் தங்களது கேஜெட்டை பற்றிய முழு செயல் திறனை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. இணைய விமர்சனங்கள், செயல் திறன் விளக்க வீடியோக்கள் போன்றவை புது தொழில்நுட்பம் குறித்த புரிதலை உண்டாக்கும். அது மட்டுமின்றி குறைப்பாடுகளையும் அலசி ஆராய்வது அவசியம்.
எனவே, கேஜெட்டுகளை சந்தைக்கு வந்த உடன் வாங்குவதை தவிர்க்கலாம். இந்த கால கட்டத்தில், ஸ்மார்ட் போன்கள் வாங்குவதை தவிர்க்க இயலாது. ஆனால், ஸ்மார்ட் தொலைக்காட்சி, ஸ்மார்ட் ஸ்பீக்கர் போன்ற இணைய வசதி கொண்ட பொருட்களை வாங்குவது அவசியமா என யோசிக்க வேண்டும்.
நிறுவனங்கள் நினைக்கும் பொருளை உருவாக்கி சந்தையில் விற்பனைக்கு விட முடிகிறது. ஆனால் அது பற்றிய பாதுகாப்புதன்மை குறித்து உறுதி அளிக்க மறுக்கின்றனர். எனவே நாம் கவனமாக இருப்பதுதான் பாதுகாப்பாக இருக்க ஒரே வழி.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்