தென்கொரியவின் க்ரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனமான பிட்தம்பின், 35 பில்லியன் யான் (சுமார் 214 கோடி ரூபாய்) மதிப்புள்ள விர்ச்சுவல் காயின்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலத்திற்குள்ளாக இரண்டு கொரிய பிட்காயின் வர்த்தக நிறுவனங்கள் இதுபோன்ற சைபர் குற்றவாளிகளின் இணைய தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன.
பிட்தம்ப் நிறுவனம் அதனுடைய இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 35 பில்லியன் யான் மதிப்புள்ள க்ரிப்டோகரன்சி திருடப்பட்டுள்ளதாக தகவல் தெரிந்ததை அடுத்து நிறுவனத்தின் அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
உலகின் ஆறாவது பிஸியான பரிமாற்ற நிறுவனமாக அறியப்படுகிறது பிட்தம்ப், அந்நிறுவனம் “ வாடிக்கையாளர்களின் தகவல்கள் அனைத்தும் சேஃப் கோல்ட் வால்ட் எனும் இணையத்துடன் நேரடியான தொடர்பில்லாத தளத்தில் சேமித்து வைத்துள்ளோம். வாடிக்கையாளர்களுக்கு முழுமையான இழப்பீடை வழங்குவோம்” எனத் தெரிவித்துள்ளது.
இது போன்ற சம்பவங்கள் சர்வதேச க்ரிப்டோகரன்சி சந்தையில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும், வலுவில்லாத ஒழுங்குமுறைகளையும் சுட்டிக் காட்டி எச்சரிக்கிறது. பல சர்வதேச கொள்கை வகுப்பாளர்களும் கூட முறையான ஒழுங்குமுறை இல்லாத இந்த டிஜிட்டல் நாணய வர்த்தகத்தில் கவனத்துடன் இருக்குமாறு முதலீட்டாளர்களை எச்சரித்துள்ளனர்.
ராய்ட்டர்ஸ் நிறுவனம் தொடர்பு கொண்டபோது பிட்தம்ப் உடனடியாக எந்த கருத்தும் கூறவில்லை
லக்ஸம்பர்க்கைச் சார்ந்த பிட்ஸ்மேப் நிறுவனத்தில் கடைசியாக பிட்காயின் வர்த்தகம் $6590.00 டாலராக (சுமார் ரூ 4.49 லட்சங்கள்) இருந்தது. இந்த வர்த்தகம், கடந்த வாரங்களில் பல்வேறு க்ரிப்டோகரன்சி பரிமாற்றங்கள் சந்தித்த இடையூறுகளால் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதையடுத்து பெரும் சரிவை சந்தித்துள்ளது.
கடந்த டிசம்பர் 2017-ன் மத்தியில் உச்சத்தில் இருந்த பிட்காயின் வர்த்தகத்தின் மதிப்பிலிருந்து தற்போது 70% வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
ஜீன் 11 அன்று மற்றுமொரு தென்கொரிய க்ரிப்டோகரன்சி நிறுவனமான காயின்ரெயிலும் ஹேக் செய்யப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் காயின்செக் எனும் ஜப்பான் வர்த்தக நிறுவனமத்தில் அரை பில்லியன் டாலர் மதிப்பிலான டிஜிட்டல் கரன்சி திருடப்பட்டதையடுத்து இதுபோன்ற இணையவழி தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்