ஒரு நாளைக்கு சுமார் 60 லட்சம் தவறான விளம்பரங்கள் தடை செய்யப்படுவதாக கூகுள் தகவல்!
தங்களது பயனாளிகளுக்கு ஒரு நல்ல இணைய அனுபவம் கிடைக்கும் வகையில் கூகுள் நிறுவனம் தொடர்ந்து இணையத்தில் காணப்படும் தவறுதலான விளம்பரங்களை நீக்கி வருகிறது.
இந்நிலையில் கூகுள் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் 2018-ம் ஆண்டில் மட்டும் சுமார் 230 கோடி விளம்பரங்களை தடை செய்துள்ளதாகவும் மேலும் இதுபோன்ற தவறுகள் இனி வரமால் இருக்க 31 புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஒரு நாளைக்கு சுமார் 60 லட்சம் தவறான விளம்பரங்கள் தடை செய்யப்படுவதாகவும் இப்படி தடை விதிக்கப்படுகின்ற விளம்பரங்கள் மீண்டும் தோன்றாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் கூகுள் நிறுவனம் சார்பாக வெளியான தகவலின் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூகுள் விளம்பர குழு தலைவர் ஸ்காட் ஸ்பென்சர் கூறுகையில், ''கூகுள் நிறுவனத்தை பொருத்தவரை இதுபோன்ற தவறான விளம்பரங்களை நீக்கி எல்லோரும் பயன்படுத்தும் இணைய சூழலை உருவாக்க செயல்படுகிறோம். எங்களது விளம்பரங்கள் வணிகர்கள் மற்றும் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே இருக்கிறது.
எனினும் இதுபோன்ற தவறான விளம்பரங்கள் எங்களது நல்ல நோக்கத்தை வீண் செய்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கூகுள் நிறுவனம் இதுவரை சுமார் 10 லட்ச தவறான விளம்பரதாரர்களை கண்டுபிடித்து அவர்களை நீக்கியுள்ளதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இது 2017-ல் நாங்கள் நீக்கியதை விட சுமார் இரண்டு மடங்காகும். மேலும் சுமார் 734,000 பப்ளிஷர்ஸ் மற்றும் ஆப் உற்பத்தியாளர்களை நீக்கியுள்ளதாகவும் சுமார் 1.5 பில்லியன் ஆஃப்களை நீக்கியுள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Amazon Great Indian Festival 2026: Best Window AC Deals
Amazon Great Indian Festival 2026: Best Dishwasher Deals From Hafele, IFB, Bosch and More
Google Gemini 4 Argon Launched Globally for Developers and Enterprises