கூகுள் மெட்டிரீயல் தீம் மெதுவாக தனது தயாரிப்புகளுக்கு மாற்றங்களை கொண்டு வருகின்ற நிலையில் தற்போது ஜிமெயிலுக்கு இந்த அப்டேட் வந்துள்ளது. ஆண்ட்ராய்டு போன்களுக்கு கடந்த மாதம் வெளியான இந்த 'தீம்' அப்டேட், போனில் இருக்கும் செயலிக்கு ஒரு புதிய லூக்கை தந்துள்ளது.
பலரால் வரவேற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த அப்டேட் ஐபோன்கள் மற்றும் ஐபேடுக்கும் வர உள்ளதால் ஐஓஎஸ் பயனர்கள் உற்சாகமடைந்த்ள்ளனர். இந்த அப்டேட் ஆனது இந்த வாரமே போன்களுக்கு வரும் என எதிர்பார்கப்படுகிறது.
மேலும் இந்தப் புதிய 'தீம்'மை பெற தனியாக அப்டேட் எதும் செய்யத் தேவையில்லை. இந்த புதிய வெர்ஷனானது தானாகவே அப்டேட் செய்துப்பட்டுவிடும். இந்த அப்டேட் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் எல்லா ஜஓஎஸ் தயாரிப்புகளுக்கும் சென்றடையும்.
புதிய கம்போஸ் பட்டன், மற்ற அக்கவுன்டுகளுக்கு மாறும் வசதி போன்றவைகள் இந்த அப்டேட் மூலம் பெற முடியும். அதுபோல் இதனால் மின்னஞ்சல்களை தேடுவதறக்கும், ஃபயில்களை இணைக்கவும் எளிதாக இருக்கும் எனப்படுகிறது.
ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல கூகுள் நிறுவனம் தனது செயலிகளுக்கு ஓவ்வொன்றாக 'தீம்' மாற்றத்தை கொண்டு வருகிறது. இந்த அப்டேட்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் கருவிகளுக்கும் பொருந்தும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்