கொரோனா வைரஸ்: அத்தியாவசிய தேவைக்காக மீண்டும் சேவையை தொடங்கியது பிளிப்கார்ட்! 

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
கொரோனா வைரஸ்: அத்தியாவசிய தேவைக்காக மீண்டும் சேவையை தொடங்கியது பிளிப்கார்ட்! 
ஹைலைட்ஸ்
 • அத்தியாவசிய தயாரிப்புகளுக்காக சேவைகளை மீண்டும் தொடங்கியது பிளிப்கார்ட்
 • வலைத்தளம் & மொபைல் செயலியில் உள்ள அனைத்து ஷாப்பிங்கையும் நிறுத்தியது
 • இந்தியா 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கில் உள்ளது

வால்மார்ட்டின் பிளிப்கார்ட் அதன் விநியோக ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் தொந்தரவில்லாத விநியோகச் சங்கிலி குறித்த மையம் மற்றும் மாநில அரசின் உத்தரவாதங்களைப் பெற்ற பின்னர், அத்தியாவசிய தயாரிப்புகளுக்கான இ-காமர்ஸ் சேவைகளை மீண்டும் தொடங்கும். கொரோனா வைரஸ் பரவுவதை எதிர்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கை உத்தரவிட்ட சில மணி நேரங்களிலேயே, பெங்களூரைச் சேர்ந்த பிளிப்கார்ட், புதன்கிழமை அதிகாலை தனது வலைத்தளம் மற்றும் மொபைல் செயலியில் உள்ள அனைத்து ஷாப்பிங்கையும் நிறுத்தியது. 

நெருக்கடி தீவிரமடைந்துள்ளதால் உலகெங்கிலும் உள்ளவர்கள் வீட்டுப் பொருட்கள், உணவு மற்றும் மருந்துகளை வாங்குவதற்காக ஆன்லைன் விற்பனையாளர்களிடம் அதிகளவில் திரும்பியிருந்தாலும், இ-காமர்ஸ் குறித்த இந்திய அதிகாரிகளின் கலவையான செய்திகளில் குழப்பம் ஏற்பட்டது.

காவல்துறை அதிகாரிகளால் சில விநியோகங்கள் நிறுத்தப்படுவதாக அறிக்கைகள் வந்த நிலையில், ஊரடங்கை செயல்படுத்துபவர்களில் சிலருக்கு இந்த குழப்பம் நீடித்தது.

Flipkart-ன் சேவைகளில் ஓரளவு மீண்டும் தொடங்குவதை அறிவித்து, தலைமை நிர்வாகி கல்யாண் கிருஷ்ணமூர்த்தியின் அறிக்கை, சட்ட அமலாக்க அதிகாரிகளால் அதன் பொருட்கள் மற்றும் விநியோக தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான பாதை வழங்கப்படும் என்று உறுதி செய்யப்பட்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

"(நாங்கள்) இன்று எங்கள் மளிகை மற்றும் அத்தியாவசிய சேவைகளை மீண்டும் தொடங்குகிறோம்" என்று கிருஷ்ணமூர்த்தி கூறினார். பிளிப்கார்ட் குழுமம், பேஷன் போர்ட்டல் மிந்த்ரா (Myntra) மற்றும் டிஜிட்டல் பேமெண்ட் வணிக ஃபோன்பேவையும் (PhonePe) கொண்டுள்ளது.

அமேசான்.காமின் இந்திய வணிகம், பிளிப்கார்ட்டின் முக்கிய போட்டியாளரான செவ்வாயன்று தனது சேவைகளை அத்தியாவசிய பொருட்களின் விற்பனை மற்றும் விநியோகத்திற்கு வரையறுக்கப்படுவதாக அறிவித்தது. புதன்கிழமை, அதன் மளிகை சேவை பல நகரங்களில் கிடைக்கவில்லை மற்றும் பிற உணவு அல்லது வீட்டுப் பொருட்களுக்கான ஆர்டர்கள் ஏப்ரல் முதல் வாரத்தைத் தாண்டி விநியோக தேதிகளைக் காட்டின.

ஹெல்த்கேர் தளம் மெட்லைஃப் (Medlife) தேசிய ஊரடங்கிற்கு பின்னர் விநியோக சிக்கல்களை எதிர்கொண்டது.

புதுடெல்லி பகுதியில் உள்ள மக்களை கலைக்க முயன்றதால், ஒரு விநியோக தொழிலாளி மீது காவல்துறை அதிகாரிகள் தடியடி நடத்தினர். மேலும், குறைந்தது மூன்று பேர் வாடிக்கையாளர்களுக்கு தயாரிப்புகளை பெறுவதைத் தடுத்துள்ளனர் என்று தலைமை நிர்வாகி அனந்த் நாராயணன் தெரிவித்தார்.

"நீங்கள் ஊரடங்கை பச்சாத்தாபத்துடன் செயல்படுத்த வேண்டும், நீங்கள் மிருகத்தனமாக நடந்துகொள்வீர்கள் என்று நான் நினைக்கவில்லை," என்று நாராயணன் கூறினார். "யாரோ ஒருவர் தாக்கப்பட்டால், மற்றவர்களை வேலைக்கு வருவது மிகவும் கடினம்."

அலிபாபா ஆதரவு ஆன்லைன் மளிகை பிக்பாஸ்கெட்டின் (BigBasket) சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

"பணியாளர்கள் மற்றும் வாகனங்களை நகர்த்த அனுமதிக்கும் பாஸ் மற்றும் அனுமதிகளுக்காக உள்ளூர் அதிகாரிகளுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்" என்று பிக்பாஸ்கெட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அடுத்த ஏழு நாட்களுக்கு, அது செயல்படும் அனைத்து நகரங்களிலும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாஃப்ட் பேங்க் ஆதரவுடைய க்ரோஃபர்ஸ் (Grofers) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அல்பிந்தர் திண்ட்சா (
Albinder Dhindsa), கடந்த சில நாட்களாக "எங்கள் செயல்பாடுகளில் விக்கல்கள்" காரணமாக ஆன்லைன் மளிகை விற்பனையாளருக்கு சுமார் 4,00,000 ஆர்டர்கள் உள்ளன.

நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க உள்ளூர் அதிகாரிகளுடன் க்ரோஃபர்ஸ் பணியாற்றி வருவதாகவும், விரைவில் புதிய ஆர்டர்களை ஏற்கத் தொடங்குவதாகவும் அவர் கூறினார்.

© Thomson Reuters 2020

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. ஒன்பிளஸ் 8-ன் அடுத்த விற்பனை ஜூன் 4 ஆம் தேதி தொடங்குகிறது!
 2. நோக்கியாவின் மூன்று புதிய போன்கள் அறிமுகம்!
 3. இன்பினிக்ஸ்-ன் இரண்டு ஸ்மார்ட்போன்கள் நான்கு பின்புற கேமராக்களுடன் அறிமுகம்!
 4. விவோ எக்ஸ் 50 சீரிஸின் விவரங்கள் கசிந்தன!
 5. பிஎஸ்என்எல்-ன் ரூ.1,599 மற்றும் ரூ.899 ரீசார்ஜ் ப்ளான்கள் அறிமுகம்!
 6. ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் மீண்டும் எப்போது கிடைக்கும்?
 7. 43 இன்ச் ஸ்மார்ட் டிவியை அடுத்த வாரம் கொண்டு வருகிறது நோக்கியா!
 8. சாம்சங் இரண்டு புதிய போன்களை குறைந்த விலையில் கொண்டு வருகிறது!
 9. 20 நாட்கள் பேட்டரி ஆயுளுடன் இந்தியாவுக்கு வருகிறது Amazfit T-Rex!
 10. ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 விற்பனை ஒத்திவைப்பு!
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com