பிளிப்கார்ட் தனது இரண்டவாது சுற்று ஃபெஸ்டிவல் சேலை அடுத்த வாரம் துவங்க உள்ளது. இந்த சேலிற்கு 'ஃபெஸ்டிவல் தமாகா டேஸ்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வால்மார்ட்டிற்கு சொந்தமான பிளிப்கார்ட் இந்த ஃபெஸ்டிவல் சேலை வரும் அக்.24 முதல் தொடங்குகிறது. 4 நாட்கள் நடைபெறும் இந்த பிளப்கார்ட் சேலில் முன்னணி நிறுவனங்களில் அனைத்து பொருட்களுக்கும் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. கடந்த வாரம் நடந்து முடிந்த பிக்மில்லியன் டேஸ் சேலில், ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆன்லைன் சந்தையில் பெரும் சாதனை படைத்தது. இதேபோல், அமேசான் இந்தியாவும் தனது இரண்டாவது கிரேட் இண்டியன் சேலை அடுத்த வாரம் தொடங்குகிறது.
பிக் பில்லியன் டேஸ் சேலை போல் இல்லாமல், பிளிப்கார்ட் தமாகா டேஸ் சேலானது, முதல் நாள் முதலே அனைத்து பொருட்களுக்கும் தள்ளுபடியை வழங்குகிறது. பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு ஆக்.23 இரவு 9 மணி அளவில் முன்னதாகவே இந்த தள்ளுபடியை பிளிப்கார்ட் வழங்குகிறது. பிளிப்கார்ட் பிளஸ் என்பது நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய திட்டமாகும். இது பயணர்களுக்கு முதன்மையான இலவச டெலிவரி, முதன்மையான வாடிக்கையாளர் சேவை, வெகுமதி புள்ளிகள் மற்றும் பல சேவைகளை வழங்குகிறது.
பிளிப்கார்ட் நிறுவனம் இந்த சேலில் பேமண்ட் சார்ந்த சலுகைகளை வழங்க ஆக்சிஸ் பேங்க் உடன் பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கேஸ்பேக் சலுகையா அல்லது உடனடி சலுகையா என்பது குறித்து பிளிப்கார்ட் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும் பேமண்ட் ஆஃபர்கள் ஆக்ஸிஸ் பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்களுக்கு எக்ஸ்சேஞ்ச், பாதுகாப்பு திட்டம், பைபேக் உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் வழங்க உள்ளதாக பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒருவேளை கடந்த பிக் மில்லியன் சேல் வாய்ப்பை தவறவிட்டிருந்தால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்றிக்கொள்ளுங்கள்.
பிளிப்கார்ட் ஃபெஸ்டிவ் தமாகா சேலில் ஸ்மார்ட்போன்களை தவிர்த்து, டிவி உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருட்களுக்கு 70 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. 500 நிறுவனங்களின் 38,000க்கும் அதிகமான பொருட்களுக்கு தள்ளுபடி வழங்க உள்ளதாக ஆன்லைன் சந்தை தெரிவித்துள்ளது. மேலும், 3 கோடிக்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 80 சதவீத தள்ளுபடி வழங்குகிறது.
வழக்கம்போல, பிளிப்கார்ட் ஃபெஸ்டிவல் சேலில் இருக்கக்கூடிய சிறப்பு அம்சங்களை உங்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டே இருப்போம். இதனால் பிளிப்கார்ட் ஃபெஸ்டிவ் சேல் தொடங்கியதும், கேட்ஜெட்ஸ் 360 தளத்துடன் இணைந்திருங்கள்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்