Flipkart Big Billion Days Sale 2024 எதுக்கு எல்லாம் ஆபர்?

Flipkart Big Billion Days Sale 2024 எதுக்கு எல்லாம் ஆபர்?

Photo Credit: Flipkart

Flipkart Big Billion Days is the e-commerce platform's biggest sale of the year

ஹைலைட்ஸ்
  • Flipkart Big Billion Days Sale 2024 செப்டம்பர் 27 ஆரம்பம்
  • Flipkart Plus இருப்பவர்கள் செப்டம்பர் 26 அணுகலாம்
  • HDFC கார்டு இருப்பவர்களுக்கு கூடுதல் 10% தள்ளுபடி
விளம்பரம்

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Flipkart Big Billion Days Sale 2024 பற்றி தான்.


Flipkart Big Billion Days Sale 2024 செப்டம்பர் 27 அன்று தொடங்க உள்ளது. Flipkart Plus இருப்பவர்கள் முன்கூட்டியே செப்டம்பர் 26 அணுகலாம். அதாவது செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கும் பிக் பில்லியன் டேஸ் சேல் ஆனது முழுக்க முழுக்க பிளிப்கார்ட் பிளஸ் மெம்பர்களுக்கானதாக (Flipkart Plus Members) இருக்கும். மறுநாள் முதல், அதாவது செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் மற்ற அனைவருக்கும் அணுக கிடைக்கும். விற்பனையின் போது, ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள், ஸ்மார்ட்வாட்ச்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பலவற்றில் பயனர்கள் பலவிதமான தயாரிப்புகளில் தள்ளுபடி பெறலாம். கூகுள் பிக்சல் 8 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்23 போன்றவற்றை கவர்ச்சிகரமான விலையில் கிடைக்க உள்ளது.


Google Pixel 8 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி மாடல் விலை பொதுவாக ரூ. 75,999 வரும். இது 40 ஆயிரத்துக்கும் கீழ் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Samsung Galaxy S23 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி மாடல் உள்ளடங்கிய வழக்கமாக ரூ. 89,999 வரும். இதுவும் 40 ஆயிரத்துக்கும் கீழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Samsung Galaxy S23 FE அடிப்படை மாடல் பொதுவாக இணையதளத்தில் ரூ. 79,999, விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது 30,000 கீழ் வரும் என கூறப்படுகிறது. செயல்திறனை மையமாகக் கொண்ட Poco X6 Pro 5G செல்போன் 20,000 ஆயிரத்துக்கும் கீழ் கிடைக்கும். மற்ற ஸ்மார்ட்போன்களின் விற்பனை விலைகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், CMF Phone 1 , Nothing Phone 2a , Poco M6 Plus , Vivo T3X , Infinix Note 40 Pro மற்றும் பலவற்றை தள்ளுபடி விலையில் வாங்க முடியும் என்று Flipkart உறுதிப்படுத்தியுள்ளது.


Flipkart குறிப்பிட்ட தள்ளுபடிகளுக்கு மேல் கூடுதல் வங்கிச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் விருப்பமும் உள்ளது. HDFC வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தினால் கூடுதலாக 10 சதவீதம் உடனடி தள்ளுபடியைப் பெறலாம். மேலும், Flipkart UPI மூலம் பரிவர்த்தனை செய்தால் ரூ. 50 தள்ளுபடி கிடைக்கும். வாடிக்கையாளர்கள் ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம் என்றும் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. பிளிப்கார்ட் பே லேட்டர் பேமெண்ட்ஸ் கருவியுடன் ஒரு லட்சம் ஆபர் கிடைக்கிறது. பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது கட்டணமில்லா EMI வசதியும் கிடைக்கும்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Flipkart Big Billion Days Sale 2024, Flipkart, Flipkart Sale
Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. மேலும்
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. Nothing நிறுவனத்திடம் இருந்து இப்படி ஒரு செல்போனை எதிர்பார்க்கலாம்
  2. Galaxy S25 Edge செல்போன் சஸ்பென்ஸ் மேல் சஸ்பென்ஸ் எகிறவிடும் சாம்சங்
  3. Samsung Galaxy S25 Ultra புடிச்சா குதிரை கொம்பா தான் புடிக்கணும்
  4. Samsung Galaxy S25, Galaxy S25+ கொடுக்கும் விலைக்கு என்ன இருக்கு இதில்?
  5. WhatsApp Status வைத்தால் Facebook, Instagram போகும்! அதிரி புதிரி அப்டேட்
  6. Redmi K90 Pro செல்போன் மிரள விடும் அம்சங்களுடன் வருகிறது
  7. இந்தியாவுக்கு வரும் புது iQOO போன் எல்லாமே சும்மா மெர்சல் ரகம்
  8. அண்டத்தை கண்காணிக்கும் சிசிடிவியா இந்த ஹபிள் தொலைநோக்கி?
  9. இது மட்டும் தெரிந்திருந்தால் Samsung Galaxy S25 செல்போனே வாங்கி இருப்பேனே
  10. வீடியோ செம்மயா வரும்! Instagram தரப்போகும் செம்ம எடிட் வசதிகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »