Flipkart நிறுவனம், தனது 2019ஆம் ஆண்டிற்கான பிக் பில்லியன் டேஸ் விற்பனை தேதிகளை அறிவித்துள்ளது. இந்த விற்பனை செப்டம்பர் 29-ல் துவங்கும் என்று பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. செப்டம்பர் இரவு 12 மணிக்கு துவங்கும் இந்த விற்பனை அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ளது. இந்த விற்பனை அனைத்து விதமான தயாரிப்புகளுக்கும் இந்த விற்பனையில் சலுகைகளை பெறவுள்ளது. இருப்பினும், மொபைல்போன்கள், மின்னனு சாதன பொருட்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றிற்கான சலுகை விற்பனை செப்டம்பர் 30-ல் தான் கிடைக்கப்பெறும். இந்த விற்பனையில் ஆக்சிஸ் வங்கி கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடியை பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது, ஐசிஐசிஐ கிரடிட் கார்டுகளுக்கும் 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடி. அதுமட்டுமின்றி, இந்த விற்பனையில் பல கடன் வசதிகளையும் பிளிப்கார்ட் நிறுவனம் அளிக்கிறது, கார்டு இல்லாத கடன், பிளிப்கார்ட் பேலேட்டர் (Flipkart PayLater) முதல் முன்னனி வங்கிகளின் கார்டுகளுக்கு ஈ.எம்.ஐ வசதிகள் வரை.
பிளிப்கார்ட் நிறுவனம், தனது பிளிப்கார்ட் ப்ளஸ் வாடிக்கையாளர்களுக்கு இந்த விற்பனை 4 மணி நேரம் முன்னதாகவே திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மொபைல்கள், கேட்ஜெட்கள், டிவிக்கள், வீட்டு சாதனங்கள், பேஷன், தனிப்பட்ட பராமரிப்பு உபகரணங்கள், பர்னிச்சர் இன்னும் பல, நிறைய வகைகளில் பல சலுகைகளில் கிடைக்கப்பெறும் என்று இந்த இ-காமர்ஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளது. முன்பு கூறியதுபோல, மொபைல்போன்கள், மின்னனு சாதன பொருட்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றிற்கான சலுகை விற்பனை, இந்த விற்பனை துவங்கிய ஒரு நாளுக்குபின் செப்டம்பர் 30-ல் தான் கிடைக்கப்பெறும். இன்னும் என்னென்ன சலுகைகள் என்பதை பிளிப்கார்ட் நிறுவனம் அறிவிக்கவில்லை என்றாலும், விற்பனைக்கு முன்னதாக கொஞ்சம் கொஞ்சமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பிக் பில்லியன் டேஸ் விற்பனைக் காலத்தில், வாடிக்கையாளர்கள் முதல் முறையாக சாதனங்களுக்கான காப்பீட்டை பெற முடியும். பிளிப்கார்ட் தனது நெட்வொர்க்கில் சுமார் 30,000 கிரானாக்களைச் சேர்த்துள்ளது, விற்பனையாளர்களுக்கு பிக்-அப் வசதிகளை வழங்கும் பின்கோட்களின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரித்துள்ளது. மேலும் பிளிப்கார்ட் நிறுவனம் இந்த விற்பனை காலத்தில் மணிநேர அடிப்படையிலான ஒப்பந்தங்கள் மற்றும் மின்னல் ஒப்பந்தங்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2019 விற்பனையின்போது, பிளிப்கார்ட் ஆக்சில் வங்கி கார்டுகளுக்கு 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடி மற்றும் 5 சதவிகிதம் அளவில்லாத கேஷ்-பேக் ஆகிய சலுகைகள் வழங்கப்படவுள்ளது. இதுமட்டுமின்றி 100 கோடி ரூபாய் வரை பரிசுகளை அள்ளித்தரும் விளையாட்டுகள் மற்றும் போட்டிகளையும், இந்த விற்பனையின்போது நடத்த பிளிப்கார்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பிளிப்கார்ட் சில தயாரிப்புகளுக்கு 4x சூப்பர் கோயின்களை வழங்கவுள்ளது, மேலும் வெகுமதிகளில் பிரபலங்களை சந்திக்கும் அனுபவங்கள், இலவச விமான சலுகைகள் மற்றும் பிற பிரத்தியேக வெகுமதிகள் இந்த விற்பனை காலத்தில் கிடைக்கும். இந்த ஆண்டு பிக் பில்லியன் டேஸ் விற்பனைக்கு அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், ஆலியா பட், விராட் கோஹ்லி, எம்.எஸ்.தோனி, புனேத் ராஜ்குமார், துல்கர் சல்மான் மற்றும் மகேஷ் பாபு போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் பிளிப்கார்ட் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஈ-காமர்ஸ் தளம் விற்பனைக் காலத்தில் சிறந்த பிராண்டுகளிலிருந்து புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்துள்ளது, மேலும் இது கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்களுக்கான முதல் பெரிய பில்லியன் நாட்களாக இருக்கும் என்றும், இது முழு நாட்டிற்கும் விற்க வாய்ப்பைப் பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
பிளிப்கார்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி ஒரு அறிக்கையில், “ஒவ்வொரு ஆண்டும், பிக் பில்லியன் நாட்கள் இந்தியாவின் பண்டிகை காலத்தின் தொடக்கத்தை குறிக்கிறது, மேலும் ஒவ்வொரு ஆண்டு போல, இந்த ஆண்டும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் லட்சம் விற்பனையாளர்களுக்கும் சிறந்த அனுபவத்தை வழங்க நாங்கள் தயாராகிக்கொண்டிருக்கிறோம்." என்று கூறினார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்