அரசு புதிய சுத்திகரிப்பு விதிமுறைகளை வகுத்துள்ளது, மேலும் ஆரோக்ய சேது தொடர்பு டிராக்கின் செயலி பதிவிறக்குவது கட்டாயமாக்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால், நாடு தழுவிய ஊரடங்கின் போது ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் செயல்பட அரசு அனுமதித்துள்ளதால், ஒரு வரைவு SOP (Standard Operating Procedure) வகுக்கப்பட்டு பங்குதாரர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களின் தலைமை இயக்க அதிகாரிகள் (chief operating officer - COO) சமூக தூர மற்றும் சுத்திகரிப்பு விதிமுறைகளை கண்டிப்பாக செயல்படுத்தி வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. மேலும், ஊழியர்கள் Aarogya Setu application-ஐ பதிவிறக்க கட்டாயமாக்கியுள்ளது.
"இந்த SOP-ன் நோக்கம், விற்பனையாளர்கள் உட்பட விநியோகச் சங்கிலி முழுவதும் ஒரு தொற்றுநோய் பாதித்தபோது பணியிடத்தில் சுத்தம் செய்தல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வழங்குவதாகும்" என்று பி.டி.ஐ கூறியுள்ளது.
கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, MSME (Ministry of Micro, Small and Medium Enterprises)-கள் FSSAI (Food Safety and Standards Authority of India)-ன் உணவு சுகாதாரம் மற்றும் உணவு வணிகத்திற்கான பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.
COVID-19 அறிகுறிகளுக்கான (இருமல், தும்மல், காய்ச்சல், சுவாசக் கஷ்டம்) விற்பனையாளர், கிடங்கு மற்றும் விற்பனை நடவடிக்கைகளில் பணியாளர்களைத் கண்கானிக்க, SOP வரைவு வழங்குவதோடு, அறிகுறிகள் இருந்தால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக அறிக்கை அளிக்கிறது.
வளாகத்திற்கு வரும் ஒவ்வொரு பணியாளர் மற்றும் பார்வையாளருக்கும் முழுவிவரம் அடங்கிய Logbook பராமரிக்கப்பட வேண்டும். நுழைவுவாயில், குறிப்பிட்ட இடைவெளியில் மற்றும் ஆலையில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு ஹேண்ட்வாஷ் / சானிடைசர் பயன்படுத்த அனைத்து ஊழியர்களுக்கும் அறிவுத்தப்பட்டுகிறது
கூட்டங்களைக் கட்டுப்படுத்த கிடங்குகள் மற்றும் மையங்களில் ஷிப்ட்ஸ் அடிப்படையில் ஊழியர்கள் இயங்க வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் MSME-ஆல் நுழைவாயிலில் முகமூடிகள் வழங்கப்பட வேண்டும்.
விற்பனையாளர்களின் வளாகத்தை ஒரு நாளைக்கு ஒரு முறை கிருமிநாசினியுடன் சுத்தம் செய்தல், அனைத்து தள்ளுவண்டிகளையும் பிற தொழில்துறை இயந்திரங்களையும் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒரு முறை கிருமிநாசினி மூலம் துடைப்பது மற்றும் கதவு அறைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட விரிவான வழிகாட்டுதல்களையும் இந்த வரைவு வழங்குகிறது.
டெலிவரிக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும் மற்றும் ஓட்டுநர்களுக்கான ஊழியர்களைப் போன்ற விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். டெலிவரியின் போது, ஒவ்வொரு விநியோக ஊழியரும் / ஓட்டுநரும் நிறுவனத்தின் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும் மற்றும் பயன்படுத்தப்படும் வாகனங்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும் / சுத்திகரிக்கப்பட வேண்டும் / கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
அனைத்து விநியோக ஊழியர்களும் டெலிவரி செய்யும் போது கண்டிப்பாக முகமூடிகளை அணிய வேண்டும், வாடிக்கையாளர்களுடன் குறைந்தபட்சம் 3 அடி தூரத்தை பராமரிக்க வேண்டும்.
"Cash on Delivery ஆப்ஷன்கள், பொருளின் மதிப்பைப் பொருட்படுத்தாமல் அனைத்து ஆர்டர்களுக்கும் முடிந்தவரை ஊக்கப்படுத்தப்பட வேண்டும்" என்றும் கூறப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Single Papa OTT Release Date: When and Where to Watch Kunal Khemu’s Upcoming Comedy Drama Series?
Diesel Set for OTT Release Date: When and Where to Harish Kalyan's Action Thriller Online?