பெங்களூரு அலுவலகத்தில் உள்ள கூகுள் ஊழியருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனம் தனது அனைத்து ஊழியர்களையும் வீட்டிலிருந்து வேலை செய்யச் சொல்லியுள்ளது.
Dell India மற்றும் மைண்ட்ரீக்குப் பிறகு, நாட்டில் தொழில்நுட்ப நிறுவன ஊழியருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்ட மூன்றாவது வழக்கு இதுவாகும்.
"எங்கள் பெங்களூரு அலுவலகத்தில் இருந்து ஒரு ஊழியர் கோவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும். எந்தவொரு அறிகுறிகளையும் உருவாக்கும் முன்பு அவர்கள் சில மணி நேரம் எங்கள் பெங்களூர் அலுவலகத்தில் இருந்தனர்" என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அன்றிலிருந்து ஊழியர் தனிமைப்படுத்தலில் இருந்து வருகிறார். மேலும், ஊழியருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சக ஊழியர்களை தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும், அவர்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்கவும் Google கேட்டுக்கொண்டுள்ளது.
"மிகுந்த எச்சரிக்கையுடன், அந்த பெங்களூரு அலுவலகத்தில் உள்ள ஊழியர்களை இன்று (வெள்ளிக்கிழமை) வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று கூகுள் தெரிவித்துள்ளது.
இந்தியா தனது முதல் கொரோனா வைரஸ் மரணத்தை கர்நாடக சுகாதார அமைச்சர் பி.ஸ்ரீராமுலு வியாழக்கிழமை உறுதிப்படுத்தினார். மாநிலத்தின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள கலாபூர்கியைச் சேர்ந்த 76 வயது நபர் கோவிட்-19 நோயால் இறந்தார்.
மத்திய சுகாதார அமைச்சகம் இதுவரை 76 கொரோனா வைரஸ் வழக்குகளை உறுதிப்படுத்தியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்