10 வருட சிறை தண்டனை மட்டுமின்றி இந்த கிரிப்டோகரன்சியை வைத்திருப்பது விடுவிப்பு அல்லாத குற்றம்.
தடை செய்யப்படவுள்ள கிரிப்டோகரன்சிகள்
பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிக்களை வைத்திருப்பவர்களுக்கு, விற்பவர்களுக்கு அல்லது அதனை கையாலுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை என்ற புதிய சட்டம் விரைவில் வரவுள்ளது. 'கிரிப்டோகரன்சிக்கு தடை மற்றும் டிஜிட்டல் நாணயங்களை பயன்படுத்துவதை ஒழுங்குமறை படுத்தும் திட்டம் 2019'-ன் வரைவு, கிரிப்டோகரன்சியை வத்திருப்பது, உருவாக்குவது, பிடித்துவைப்பது, விற்பது, பரிவர்த்தனை செய்வது மற்றும் இதனை ஏதேனும் முறையில் கையாளும் நபருக்கு 10 வருடங்கள் தண்டனை வழங்கப்படவேண்டும் என்ற ஒரு வரைவை தாக்கல் செய்துள்ளது.
10 வருட சிறை தண்டனை மட்டுமின்றி இந்த கிரிப்டோகரன்சியை வைத்திருப்பது விடுவிப்பு அல்லாத குற்றம் எனவும் வகைப்படுத்தியுள்ளது இந்த வரைவு.
கிர்ப்டோகரன்சி என்பது கிரிப்டோஜிராபியை பாதுகாப்பிற்காக பயன்படுத்தி இயங்கும் ஒரு டிஜிட்டல் நாணயம். இது பிளாக் செய்ன் (BlockChain) என்ற தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இந்த டிஜிட்டல் நாணயங்கள் மூலம் சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனை அதிகரிக்கிறது என்பதால், அதை தடுக்க இந்த புதிய வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கிரிப்டோகரன்சிக்கு தடைவிதிக்கும் இந்த வரைவுத்திட்டம், பொருளாதார விவகார செயலாளரான சுபாஸ் சந்திர கார்க், அவரின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கிரிப்டோகரன்சிக்கு இவ்வளவு கடுமையாக தண்டனைகள் வித்தித்து தடை விதிக்கப்படவுள்ள நிலையில், இந்தியா தனக்கென ஒரு டிஜிட்டல் நாணயத்தை உருவாக்கி அறிமுகப்படுத்த இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பேசுகையில்,"இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்து ஆலோசித்த பிறகே, டிஜிட்டல் நாணயம் பற்றிய முடிவுகளை எடுக்க முடியும்.", என அதிகாரிகள் கூறுகின்றனர்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்