நீண்ட காலமாக, ஆப்பிள் நிறுவனம்தான் ஒரு ட்ரில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் தோராயமாக 68.7 இலட்சம் கோடிகள்) சந்தை மதிப்பை நோக்கி விரைவதான தோற்றம் இருந்தது. தற்போது அமேசான் நிறுவனமும் அதைத் தொட்டுப் பிடிக்கும் தொலைவில் வேகமாக முன்னேறி வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 939 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக 64.5 இலட்சம் கோடிகள்) ஆகும். இதனால் உலகின் மிக அதிக மதிப்பைக்கொண்ட தனியார் நிறுவனமாக ஆப்பிள் விளங்குகிறது. செவ்வாய் அன்று தனது காலாண்டு முடிவுகளை அறிவிக்கும்போது இது ஒரு ட்ரில்லியன் டாலர் மதிப்பைக் கடக்கவும் வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில் அமேசானும் வெகு தொலைவில் இல்லை. வெள்ளியன்று அதன் சந்தை மதிப்பு அதிகபட்சமாக 917 பில்லியன் டாலர்கள் வரை உயர்ந்து, நாளிறுதியில் 882 பில்லியன் (60.6 இலட்சம் கோடி) டாலர்கள் என்று நிலைபெற்றது. அந்நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளுக்கு முதலீட்டாளர்கள் அளித்த வரவேற்பினால் இவ்வுயர்வு சாத்தியமானது.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் 886 பில்லியன் டாலர்கள் (60.9 இலட்சம் கோடி), மைக்ரோசாப்ட் 827 பில்லியன் (56.8 இலட்சம் கோடிகள்) என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஃபேஸ்புக் 505 பில்லியன் டாலர்கள் (34.7 இலட்சம் கோடி) இப்போட்டியில் பின்தங்கி உள்ளது. செவ்வாய் அன்று வெளியிட்ட தனது காலாண்டு முடிவுகளின் பின்னர் 19% இழப்பின் காரணமாக, 119 பில்லியன் டாலர்களை இழந்ததே இதற்கு காரணம்.
பாரம்பரியமான பெரிய கோடீஸ்வர நிறுவனங்களான வாரன் பஃபெட்டின் பெர்க்ஷைர்-ஹாத்வே (492 பில்லியன் டாலர்), JP மார்கன் சேஸ் (395 பில்லியன் டாலர்) ஆகியவை போட்டியை வேடிக்கை மட்டுமே பார்க்கும் இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளன.
முன்னதாக அரசு எண்ணெய் நிறுவனமான பெட்ரோசைனா 2007இல் தனது பொதுவிடுப்பின் தொடக்கத்தில் மிகச்சிறிய காலம் மட்டுமே 1 ட்ரில்லியன் டாலர் மதிப்பைத் தொட்டு நீடிக்க முடிந்தது. ஆனால் அப்போதில் இருந்து கீழிறங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்